மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட 50 அடி ஆழம் கொண்ட பள்ளம்…! பீதியில் உறைந்த மக்கள்…!

மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட 50 அடி ஆழம் கொண்ட பள்ளம்…! பீதியில் உறைந்த மக்கள்…!

  • மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கி, ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது.
  • இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக காணப்பட்டது.

மெக்சிகோ நாட்டில், சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியது. இதனையடுத்து அங்கு ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோன்றியுள்ளது. இந்த பள்ளம் சுமார் 200 அடி அகலமும், 50 அடி ஆழம் கொண்டதாக காணப்பட்டது. இந்த பள்ளத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எந்த நேரத்திலும் மீண்டும் பெரிதாகலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த பள்ளம் ஏற்படுவதற்கு முன்பதாக இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக அந்த நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். திடீரென்று நிலம் உள்வாங்கியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பூகம்பம் ஏற்படப் போகிறது என்று பீதி அடைந்து அப்பகுதியை விட்டு ஓடியுள்ளனர். பின் பயத்தில் இருந்து மீண்ட மக்கள் எச்சரிக்கையுடன் சென்று அப்பளத்தை பார்த்துள்ளனர்.

அந்த பள்ளத்தில் நீர் நிரம்பி மிகப் பெரிய கிணறு போன்று காணப்பட்டுள்ளது. இது குறித்து புவியியல் ஆய்வாளர்கள் கூறுகையில், குறிப்பிட்ட இடத்திற்கு கீழே பூமியில் பாறைகள் குறைவாக இருப்பதும், திடீரென நீரோட்டம் ஏற்பட்டாலும் இதுபோன்ற பள்ளம் தோன்றும் என்றும்,  பூமியின் மேற்பாறையை நீரோட்டம்  கரைப்பதாலும் இப்படிப்பட்ட பள்ளம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளம் சிங்க்ஹோல் என்று அழைக்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube