#BigBreaking:மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 வது முறையாக முதல்வர் பதவியேற்றார் மம்தா பானர்ஜி..!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3 வது முறையாக இன்று முதல்வர் பதவியேற்றுள்ளார் மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடி வெற்றி பெற்றது.இதனால்,மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ளார். கொரோனா தொற்று காரணமாக இந்த பதவியேற்பு விழாவானது மிக … Read more

#BigNews:மேற்கு வங்கத்தில் அனைத்து பொதுக் கூட்டங்களையும் ரத்து செய்த மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில்  தினசரி கொரோனா தொற்று சுமார் 12,000 கடந்து அதிகரித்து வருகிறது .அத்தகைய சூழ்நிலையில், திரிணாமுல் தலைவரான மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி  “நாடு முழுவதும் கோவிட்டில் அதிகரித்து வரும் நிலைமையைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றி, எனது முன் திட்டமிடப்பட்ட பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன்” மீண்டும் கூட்டங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை விரைவில் … Read more

கொரோனா தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் – மம்தா பானர்ஜி!

கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். நாடுமுழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் புதிதாக லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வைரஸை தடுப்பதற்காக ஊரடங்கு கடமையாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தற்பொழுது தடுப்பூசியும் போடப்பட்டுக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக 60 வயதுக்கு … Read more

மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தடை.., ஸ்டாலின் எதிர்ப்பு..!

அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவிதத்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளித்த புகாரின் பேரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் மம்தா பானர்ஜிக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அனைத்துக் கட்சிகள், … Read more

“பிரதமர் மோடி தினமும் இந்து-முஸ்லீம் விளையாட்டை விளையாடுகிறார்”-மம்தா பானர்ஜி..!

பிரதமர் மோடிதான் ஓட்டிற்காக தினமும் ‘இந்து-முஸ்லீம்’ விளையாட்டை விளையாடுகிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டல். திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு(TMC) அதிகளவில் வாக்களிக்குமாறு முஸ்லீம் சமூகத்தை வலியுறுத்தியதாகக் கூறப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம்  புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸ் பெற்ற மம்தா இதுகுறித்து கூறுகையில், “எனக்கு எதிராக 10 நோட்டீஸ் வழங்கப்பட்டாலும் அது … Read more

நந்திகிராமில் விதிமீறல்.., நீதிமன்றத்தை நாடுவோம்- மம்தா..!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து இதுவரை 63 புகார் செய்யப்பட்டும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது என மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் தேர்தல் நடைபெற்றவுள்ளது. முதல்கட்டத் தேர்தல் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம்தேதி நடைபெற்றது. இதில், 80 சதவீத வாக்குகள் பதிவாகியது. இந்நிலையில், இன்று 30 தொகுதிகளுக்கு 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்த 30 தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் உள்ளது. … Read more

இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக, நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும் -மம்தா..!

பாஜகவுக்கு எதிரான இந்தப் போரில் ஒரு மித்த கருத்துள்ள  கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும். பாஜக ஆட்சி செய்யாத  மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது. … Read more

மோடியின் விசாவை ஏன் ரத்து செய்ய கூடாது..? மம்தா பானர்ஜி கேள்வி..!

பிரதமர் மோடி நடத்தை விதிகளை மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். காரக்பூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவியும்,  மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், கடந்த மக்களவை தேர்தலின் போது வங்கதேச நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக இதுகுறித்து வங்கதேச அரசுடன் பேசி அந்த நடிகரின் விசாவை ரத்து … Read more

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு பேரணிக்கு சென்ற மம்தா பானர்ஜி!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திமுர்த்தி பகுதியில் இருந்து ஹஸ்ரா பகுதி வரை பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். மேற்குவங்க சட்டசபை தேர்தல், மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான … Read more

“சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தை மேற்கொள்வேன்”- மம்தா பானர்ஜி!

சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தை மேற்கொள்வேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரைக்கு பின் காரை நோக்கி செல்லும்போது அவரை சிலர் தள்ளிவிட்ட காரணத்தினால், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து கூறிய அவர், தனது காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினையால் கடும் அவதிப்படுவதாகவும், இன்னும் சில நாட்களில் உடல்நிலை தேறி … Read more