தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் இனி ஒரு வாரம் விட்டு தான் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். அதன்படி, வரும் … Read more

மெகா தடுப்பூசி முகாம்! 14,29,736 பேருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 14,29,736 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசியை அதிகரிக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த … Read more

தடுப்பூசி செலுத்துவதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை – சென்னை உயர்நீதிமன்றம்!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கோரி வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடுப்பூசி முகாம் நடத்தும் பொழுது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக பூந்தமல்லியில் உள்ள 10.5 ஏக்கர் மறுவாழ்வு மையத்தை பராமரித்து தடுப்பூசி முகாமுக்கு பயன்படுத்தலாம் என்றும் … Read more

ஜூலை மாதம் தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வருகை – மா.சுப்பிரமணியம்!

அடுத்த மாதம் தமிழகத்திற்கு 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகிறது. மேலும், மக்கள் அதிகளவில் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுவதால் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தற்பொழுது பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி..!!

 நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோரோனோவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நமக்கிருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் … Read more

முதியவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு – ஆந்திர அரசு!

கொரோனா மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை இல்லாத முதியோர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தகவல். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி, கருப்பு பூஞ்சை, மூன்றாம் அலை ஆகியவை குறித்த முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆந்திர மாநிலத்தால் உயர் … Read more

விரைவில் இந்தியாவில் … குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி கிடைக்கும் – எய்ம்ஸ் இயக்குனர்!

இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசி வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் சொந்த தயாரிப்பான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து தற்பொழுது பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் … Read more

தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 வரை கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!

தமிழகத்திற்கு ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தற்பொழுது மக்கள் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்துவதை புரிந்து கொண்டு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் … Read more

பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பு – சீரம் நிறுவனம் கோரிக்கை!

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை தங்கள் நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என சீரம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே, மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது பல இடங்களில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய … Read more

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி எங்கே? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!

இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொகள்ளாத மக்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப் போகிறீர்கள், ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாமாக முன்வந்து தாக்கல் செய்த உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு உரிய தடுப்பூசி கொள்கை வகுக்காமல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவது குறித்து நீதிபதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே சீராக … Read more