கடும் மழைகாரணமாக மகாராஷ்டிராவில் சிவப்பு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் ராய்காட்,, ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் போன்ற பகுதிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, பால்கர், புனே மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 8 வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. மேலும் தானே மற்றும் மும்பைக்கு ஜூலை 10 வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா-மத்திய அரசு..!

நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, கப்பா என்று பல வகைகளில் பரவி வருகிறது. இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா … Read more

நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு..!

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் 30 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த டெல்டா வகை கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு மக்களை பெரிதளவு பாதித்து வந்தது. தற்போது அங்கு நாளுக்கு கொரோனா தொற்று ஐந்தாயிரம் பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாசிக் … Read more

மகாராஷ்டிராவில் முதல் ஜிகா வைரஸ் தொற்று..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பெல்சர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை தெரிவித்தது. 50 வயதாகும் இந்த பெண்ணிற்கு ஜிகா வைரஸ் தாக்குதலோடு சிக்குன்குன்யா பாதிப்பிற்கும் உள்ளாகி இருக்கிறார். மேலும், இவர் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதால் மற்றவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிப்படைந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் … Read more

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் – உத்தவ் தாக்கரே

மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து  முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையில்,”பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்காக தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளையும் அரசு ஏற்கும்” என்று சிஎம்ஓ ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CM Uddhav Balasaheb Thackeray has announced ₹5 lakh each for the kin of … Read more

மகாராஷ்டிரா நிலச்சரிவில் 44 பேர் பலி..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள தலாய் மற்றும் மலாய் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களில் 36 … Read more

மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவருக்கு பலத்த காயமடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். … Read more

281 மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம்..!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 281 ஆயுர்வேத மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.  281 ஆயுர்வேத மருத்துவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தங்களை அவமரியாதையாக நடத்துவது தொடர்பாக தங்கள் வாழ்க்கையை தற்கொலை செய்து முடித்துக்கொள்ள அனுமதி கேட்டு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றுநோயின் போது ஆயுர்வேத மருத்துவர்களை மாநில அரசு மோசமாக நடத்துவதாக கூறியுள்ளனர். கடந்த இருவது … Read more

8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஜூலை 15 முதல் 8 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி மஹாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன,பின்னர்,9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து,ஜனவரி மாதம் முதல் 5 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.இதனையடுத்து,கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் … Read more

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்கள்-மத்திய ரயில்வே..!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 72 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மிகப்பெரிய முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய ரயில்வேத்துறை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் அல்லது  பன்வேல், சாவந்தவாடி சாலை அல்லது ரத்னகிரி இடையே 72 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிக்கையில் 72 சிறப்பு ரயில்களில் ஒரு ஏசி-2 அடுக்கு மற்றும் ஏசி3 அடுக்கு, நான்கு ஏசி-3 அடுக்கு, 11 ஸ்லீப்பர் … Read more