நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா-மத்திய அரசு..!

நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, கப்பா என்று பல வகைகளில் பரவி வருகிறது.

இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 34 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றில் ஏற்படும் மரபணு மாறுபாட்டை ஆராய்ச்சி செய்யும் விதமாக நாட்டில் 28 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.