8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஜூலை 15 முதல் 8 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி மஹாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன,பின்னர்,9 முதல் 12 வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து,ஜனவரி மாதம் முதல் 5 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.இதனையடுத்து,கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா இல்லாத பகுதிகளில் ஜூலை 15 முதல் 8 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு மஹாராஷ்டிரா மாநில பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.ஆனால்,திடீரென்று அந்த உத்தரவை ரத்து செய்த நிலையில்,மீண்டும் நேற்று புதிய தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

  • அதன்படி, ஒரு கொரோனா தொற்று பாதிப்பு  கூட இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள்,பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு 8 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படும்.
  • மேலும்,கொரோனா இல்லாத பகுதிகள் குறித்த கணக்கெடுப்பு பணிக்கு உள்ளூர் பணியாளர்கள்,பள்ளி அதிபர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் அடங்கிய எட்டு பேர் கொண்ட குழுவை அமைக்கப்படும்.
  • கிராமப்புறங்களில்,வகுப்புகளைத் தொடங்க எந்தப் பள்ளியை அனுமதிக்கலாம் என்பதை தீர்மானிக்க கிராம பஞ்சாயத்துத் தலைவர் இந்த குழு தலைமை தாங்குவார்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா இரண்டாவது அலை காரணமாக,ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் ,கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.இதனால்,மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருப்பதால் முறையான கல்வியை கற்க முடியாமல் உள்ளனர்.

மேலும்,ஆன்லைனில் கல்வி கற்பதால் அவர்கள் ஆன்லைன் கேம்,சினிமா போன்றவற்றிக்கு அடிமையாகின்றனர்.இவை மனச்சோர்வு போன்ற பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதற்கு பள்ளிகளை ஒரு கட்டமாக மீண்டும் திறப்பதுதான் ஒரே தீர்வு.

எனவே,பள்ளிகள் சரியான சமூக இடைவெளிகளை பின்பற்றி, ஒரு வகுப்பில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமரக்கூடாது என்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.