#Breaking:தமிழக மீனவர்கள் மீது தெளிக்கப்பட்ட கிருமிநாசினி – நீதிமன்றம் கடும் கண்டனம்!

மதுரை:இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் 68 பேர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலையில்,இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,கொரோனா அச்சம் இருப்பின் கிருமிநாசினி தெளித்ததற்கு பதிலாக தமிழக மீனவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கிடையில்,68 … Read more

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை

தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்க கோரி,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளானது நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி புகழேந்தி, ஒருதுறையின் மீது குற்றம் சுமத்தும் போது, அந்த துறை நேர்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த  வேண்டும். தமிழகம் முழுவதும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா … Read more

Breaking:வாகனங்களில் இந்த படங்களை 60 நாட்களுக்குள் நீக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!

வாகனங்களில் தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசியல் சார்ந்த படங்களை 60 நாட்களில் நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும்,வாகனங்களில் கட்சி கொடிகள்,கட்சி தலைவர்களின் படங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும்,தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும் உயர்நீதிமன்ற … Read more

தமிழ் கல்வெட்டுக்கு திராவிட அடையாளமா? – நீதிமன்றம் கேள்வி

தமிழ் கல்வெட்டுக்கு திராவிட அடையாளமா? என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் கீழடி ,கொந்தகை,ஆதிச்சநல்லூர்,கொடுமணல்,தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும்,மதுரையில் சமணர் படுகைகள் உள்ளிட்ட பழங்கால அடியாளங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராஜ்,புஷ்பவனம் ,ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,துரைசாமி ஆகியோரின் தலைமையிலான அமர்வு ,இதுதொடர்பாக … Read more

#Breaking:ஸ்டெர்லைட் கழிவுகளை விற்க -உயர்நீதிமன்றம் தடை..!

தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை விற்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அம்மனுவில்,”தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தாலுகாவில் உப்பாற்று ஓடை உள்ளது.இந்த ஓடைக்கு அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2016 அக்டோபர் மற்றும் 2015 நவம்பர் மாதங்களில் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு … Read more