முதல்வருடன் பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு..!

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முரண்பாடான கருத்து வெளியாகி வரும் நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது. மேலும், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்த சந்திப்பில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டிராகவன் உடன் உள்ளார். சமீபத்தில், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க … Read more

இன்று மாலை முதலமைச்சரை சந்திக்கிறார் எல்.முருகன்

முதலமைச்சர் பழனிசாமியை இன்று மாலை  சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் . மேலும் இப்போது உள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டமன்றத்துக்கு கூட்டணி அமைக்கப்படும். அது அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் இருக்கலாம் ,இரண்டும் இல்லாமல் கூட இருக்கலாம்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

சட்டமன்றத்  தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் -முருகன்

சட்டமன்றத்  தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இதனிடையே பாஜக ,அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 2021 -ஆம் … Read more

தேசிய பாஜக தலைவர் நட்டாவை சந்தித்த தமிழக பாஜக தலைவர் முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார் அண்மையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டார்.  அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது. குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை. செய்தி தொடர்பாளர் பட்டியலில் கூட தமிழகத்தைச் சேர்ந்த ஒரு … Read more

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல்

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள … Read more

பாஜகவில் குஷ்பு இணைந்தால் வரவேற்பேன் – எல்.முருகன்

பாஜகவில் குஷ்பு இணைந்தால் வரவேற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் குஷ்பு. இதனிடையே  குஷ்பு பாஜகவில் இணைய உள்ள தகவல் வெளியாகி வருகிறது.இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக … Read more

பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்..!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். இச்சம்பவதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் ஈவெ.ரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து  சட்டப்படி தண்டிக்க வேண்டும். காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் … Read more

பாஜக அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு மத்தியஸ்தம் செய்யவில்லை -எல்.முருகன்!

பாஜக அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு மத்தியஸ்தம் செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பதற்கான முயற்சிகள் அனைத்தையும் பாஜக செய்வதாக அண்மையில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. பாஜக மகளிரணி மாநில செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றுள்ளது. இங்கு கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கான மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என கூறியுள்ளார். மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் … Read more

“அதிமுக, பாஜக இடையே எந்த மனக்கசப்பும் கிடையாது!” – எல்.முருகன்

அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் கிடையாது என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த ஒரு மனக்கசப்பும் கிடையாது எனவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி தொடரும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சசிகலா வெளியே வந்தவுடன் அவரின் நிலைப்பாட்டை தொடர்ந்தே நடவடிக்கைகள் தெரியும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த … Read more

பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு..!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு செய்யட்டுள்ளது. பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாநில தலைவர் எல்.முருகன் குதிரை வண்டியில் வந்ததாக கூறி அவர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் மாவட்ட தலைவர் சைதை சந்துரு உட்பட 6 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது.