நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை- எல்.முருகன்..!

சென்னை கமலாயத்தில்செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,  ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும். தாமதமானாலும் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும். தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என   கூறினார். மேலும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் … Read more

சிறந்த தலைவரும், போராட்ட வீரருமாகிய காந்திஜிக்கு பிறந்ததினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன் – எல்.முருகன்!

சிறந்த தலைவரும் போராட்ட வீரருமாகிய காந்திஜிக்கு பிறந்ததினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன் என எல்.முருகன் பதிவிட்டுள்ளார். இந்திய விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரராகிய மகாத்மா காந்தி அவர்களின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் குடியரசுத் தலைவர் என பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் தலைவராகிய எல்.முருகன் … Read more

“நான் பாஜகவில் இணையப் போவதாக வெளியாகும் செய்திகள் பொய்!”- விஷால்

நடிகர் விஷால் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்திகள் அனைத்தும் பொய் என மறுப்பு தெரிவித்தார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கவிருக்கும் நிலையில், கூட்டணி தொடர்பாக பல கட்சிகள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜகவில் திரைத்துறையினர், பிரபலங்கள் என பலரும் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் விஷால், பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாகவும், அவர் பாஜகவில் இணையப்போவதாக … Read more

மாணவர்களை உலகளவில் உயர்த்தும் ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்- எல். முருகன்.!

 இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பாஜக மாநிலத் தலைவரான எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் பாஜக மாநிலத் தலைவரான … Read more

நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது – ஜே.பி. நட்டா

நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது- பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டு வருகின்றன. அதன்படி, இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் … Read more

தூய்மை பணியாளர்கள் பாதங்களில் மலர் தூவிய பாஜக மாநில தலைவர்!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தூய்மை பணியாளர்களின் பாதங்களில் மலர் தூவி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் மாநில தலைவர் எல்.முருகன் … Read more

பாஜக சார்பில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் – எல் முருகன்

தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நாளை கொண்டாடவுள்ள விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவோ மற்றும் சிலையை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. இதனை சில அரசியல் காட்சிகள் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். பின்னர் விநாயகர் சதுர்த்திக்காக தளர்வுகள் அளிக்க இயலாது என தமிழக அரசு கூறியதை ஏற்று உயர்நீதிமன்றம், வீடுகளில் தனிநபர் … Read more

எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தனரிடம் நலம் விசாரிப்பு – எல் முருகன்

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு தற்போது … Read more

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் 22ம் தேதி சென்னை வந்தடையும் – எல். முருகன்.!

ரஷ்யாவின் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை வந்தடையும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று குளிக்கும் போது ஒரு மாணவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரை காப்பாற்ற முயற்சித்த சக மாணவர்களில் மூன்று பேரும் … Read more

“விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி தருக”- முதல்வரிடம் பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்க முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த … Read more