டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து போக்குவரத்துக்கு துறை, தொழில் துறை, பள்ளிகள், கல்லூரிகள் சுற்றுலாத்தலங்கள் என மொத்தமாக கொரோனா தொற்றால் முடக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. தற்பொழுது மீண்டும் இந்த … Read more

“எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துவிட்டார்”- முதல்வர் பழனிச்சாமி!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துவிட்டார் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்தநிலையில், விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி தர வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே வருகின்றனர். அதில் ஒரு பங்காக, அண்மையில் பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக முதல்வர் … Read more

“விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி தருக”- முதல்வரிடம் பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை!

விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்க முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த … Read more

எனக்கு பாஸ்போட்டு, வரலாற்று சாதனை படைத்த ஐயா பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி.. வைரலாகும் போஸ்டர்!

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமிக்கு நிஷாந்த் எனும் மாணவர், போஸ்டர் ஒன்றை வடிவமைத்து நன்றி தெரிவித்தான். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக முதல்வர் பழனிச்சாமி, 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் பாஸ் எனவும் அறிவித்தது. அந்த தேர்வின் முடிவுகள், 10 … Read more

“தமிழகத்தில் பி.சி.ஆர். சோதனைக்கு செலவாகும் பாதி தொகையை ஏற்க வேண்டும்”- முதல்வர் கோரிக்கை!

தமிழகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு செலவிடும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக 712.64 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலையில், அதனை 3000 கோடி ரூபாயாக ஒதுக்கி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது என தெரிவித்த அவர், … Read more

தென்காசியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் – முதல்வர் பழனிசாமி!

தென்காசியில் வனத்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவர், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார். தகவல் அறிந்த கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகள் விவசாயி முத்துவை கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர். அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு … Read more

நிலுவையில் உள்ள 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து..!

தமிழகத்தில் நிலுவையில் உள்ள 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து என தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், 10-ம் வகுப்பு  மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் … Read more

#Breaking: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் உரை!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி உரையாற்ற உள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சற்று நேரத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்ற உள்ளார். அந்த உரையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியானது.

கொரோனா பரவும் சூழ்நிலையைப் பொறுத்து மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும்- முதல்வர்!

சென்னையில் கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து மேலும் பலதளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 11:00 மணிக்கு ‘ஒளிரும் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் வீடியோ கான்பரன்ஸ் மாநாட்டை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். அந்த மாநாட்டில் இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேலும், 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் … Read more

சென்னை நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. முதல்வர் ஆலோசனை!

சென்னையில் கொரோனா பாதிப்பு 15,770ஆக உயர்ந்துள்ள நிலையில், மாநகராட்சி அலுவகத்தில் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், நேற்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் வேலுமணி, சுகாதார துறை அமைச்சர் … Read more