“தமிழகத்தில் பி.சி.ஆர். சோதனைக்கு செலவாகும் பாதி தொகையை ஏற்க வேண்டும்”- முதல்வர் கோரிக்கை!

தமிழகத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு செலவிடும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக 712.64 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலையில், அதனை 3000 கோடி ரூபாயாக ஒதுக்கி நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது என தெரிவித்த அவர், பி.சி.ஆர். பரிசோதனைக்கு செலவிடும் செலவின் பாதி தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும், அதற்காக செலவாகும் தொகையை பி.எம். கேர் நிதியில் இருந்து ஒதுக்குமாறும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.