இனி நான் செல்லமாட்டேன்., எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம் என கூறி கேஎஸ் அழகிரி கண்ணீர்.!

திமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கேஎஸ் அழகிரி கண்ணீர் மல்க பேசியுள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கடந்த மூன்று நாட்களுக்கு மேல் மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றும் தொடர் இழுபறியில் உள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தது. காங்கிரஸ் தரப்பில் குறைந்தது 27 தொகுதிகளாவது ஒதிக்கீடு செய்ய வேண்டும் என கூறி வந்த நிலையில், 22 தான் ஒதுக்க … Read more

பாஜகவின் எந்த செயலும் அங்கு எடுபடாது – கேஎஸ் அழகிரி

இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார் ராகுல் காந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ராகுல் காந்தி நடப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி, ராகுல் காந்தியின் வருகையினால் … Read more

பாஜகவிடம் இருந்து எதிர்கட்சிகளை காப்பற்ற வேண்டும்., அதற்கான பந்து திமுகவிடம் தான் இருக்கிறது – கேஎஸ் அழகிரி

தொகுதி பங்கீடு குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மத்திய பாஜக அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் தோல்வியை தழுவ வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியான சிந்தனைகளை கொண்டுள்ளது என கூறியுள்ளார். பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை இருப்பதாக நான் … Read more

தொகுதி பங்கீடு: திமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் – கேஎஸ் அழகிரி

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், … Read more

புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் – கேஎஸ் அழகிரி உறுதி

சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணைநிலை ஆளுநரின் … Read more

தென்மாவட்டங்களில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தென் மாவட்டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து காங்கிரஸ் சார்பாக அவ்வப்போது பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், பிப். 27, 28, மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் … Read more

காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறேன் – கேஎஸ் அழகிரி

ஜோதிமணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையை அகற்றி புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

பிப்.25 முதல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் – காங்கிரஸ்

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சினர் பெறலாம். பொதுத்தொகுதிக்கு ரூ.5,000, தனித்தொகுதி, மகளிர் தொகுதிக்கு ரூ.2,500 நன்கொடையாக தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்ப … Read more

தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்?- கேஎஸ் அழகிரி

புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதனிடையே, … Read more

பிப்ரவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகம் வருகை – கே.எஸ்.அழகிரி தகவல்

வருகின்ற 27-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வந்து ,மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்டறிய உள்ளார் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி  பொங்கல் தினத்தன்று … Read more