புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நேற்று முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்திருந்தார். ஆளுநர் இதை ஏற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். மேலும் புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவையும் குடியரசு தலைவர் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாராயணசாமியால் தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது – எல் முருகன்

நாராயணசாமியால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், முதல்வர் நாராயணசாமியால் தான் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்றும் காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, தென் மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றி தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தற்போது இந்தியாவில் இல்லை, ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளது. புதுச்சேரியில் … Read more

புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் – கேஎஸ் அழகிரி உறுதி

சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், துணைநிலை ஆளுநரின் … Read more

முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற ஆளுநர் தமிழிசை.!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா கடிதத்தை ஏற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். புதுச்சேரியில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால், சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பானமையை நிரூபிக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். சட்டப்பேரவையில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை … Read more

#BREAKING: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி.!

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார்.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து, முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அப்போது, முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.  இதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை … Read more

தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் – கிரண் பேடி

தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் என்று கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் … Read more

#BREAKING: புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா – அமைச்சர் கந்தசாமி தகவல்

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல். புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இதுவரை காங்கிரேஸை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ் மற்றும் ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 19ஆக இருந்த நிலையில், ஏற்கனவே, பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ … Read more

வேளாண் சட்டத்திருத்த நகல்களை கிழித்தெறிந்த் புதுச்சேரி முதல்வர்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருந்ததாக ஹரியானா, குஜராத் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், கடுங்குளிரிலும் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு 9 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. அது எதுவும் பலனளிக்காத நிலையில், வேளாண் சட்டங்களை … Read more

முதல்வர், ஆளுநருக்கு பொங்கல் பரிசாக ரூ.201 அனுப்பி நூதன போராட்டம்!

பொங்கல் பரிசாக ரூ.200 மட்டும் வழங்கப்பட்டதை தொடர்ந்து சமூக அமைப்பினர், புதுச்சேரி மாநில முதல்வர் மற்றும் ஆளுநருக்கு பொங்கல் பரிசாக ரூ.201-ஐ பரிசாக வழங்கினார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்பட்டு வருகிறது. அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பரிசு விநியோக பணிகளை ஜனவரி … Read more

கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி போராட்டம்.!

புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து அண்ணா சிலை அருகே முதல்வர் நாராயணசாமி போராட்டம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 400 பேர் கொண்ட துணை ராணுவம் வந்திருந்தது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது என தெரிவித்திருந்தனர். அதாவது, கிரண்பேடியை கண்டித்து இன்று ஆளுநர் … Read more