தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சினர் பெறலாம்.
பொதுத்தொகுதிக்கு ரூ.5,000, தனித்தொகுதி, மகளிர் தொகுதிக்கு ரூ.2,500 நன்கொடையாக தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்று நன்கொடை கட்டணத்துடன் பூர்த்தி செய்து தரவேண்டும். மேலும், விருப்ப மனுவுடன் வாக்காளர் அடையாளம் அட்டை, ஆதார், பான்கார்டு நகலை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது. pic.twitter.com/y6aQMLinIq
— KS_Alagiri (@KS_Alagiri) February 19, 2021