காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பினராயி விஜயன் அரசு வெற்றி.!

கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் தீர்மானம் தோல்வியடைந்தது. கொரோனா வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும் என … Read more

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்.!

இன்று நடைபெற்ற கேரளா சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து, … Read more

கேரள முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று கூடுகிறது சட்டப்பேரவை.!

இன்று ஒரு நாள் மட்டும் கூடும் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா … Read more

ஆகஸ்ட் 26 முதல் கேரளாவில் பிரபல கோவில் தரிசனத்திற்காக திறப்பு.!

ஆகஸ்ட் 26 முதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு கேரள பத்மநாபசுவாமி கோவில் பகதர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. கேரளாவில் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவர்  என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாக spst.in என்ற கோவிலுக்கு உரித்தான வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தரிசனத்திற்கு வருகையில் … Read more

கேரள நிலச்சரிவில் மக்கள் மனதை வென்ற குவி! கேரளாவில் நாய்க்கு வழங்கப்பட்ட அரசு பணி! காரணம் இதுதானா?

கேரளாவில் நாய்க்கு வழங்கப்பட்ட அரசு பணி. கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 60- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை குவி என்ற நாய் கண்டுபிடித்தது. இந்த நாய் ஆற்றில் எதையோ மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்த மீட்பு படையினர் … Read more

கேரளாவில் ரூ.30.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.30.55 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கண்ணூரில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 657 கிராம் எடையுள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த பயணியையும்  சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

கேரள விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 பேருக்கு கொரோனா.! 80 பேர் தனிமை.!

கேரள விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்பு படையினர் மற்றும் தன்னார்வலர்களை தனிமடுத்திக்கொள்ள மருத்துவர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தினார். இந்நிலையில், மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள் 10 பேருக்கு கொரோனா … Read more

கேரள நிலச்சரிவு : எஜமானனின் 2 வயது குழந்தையை கண்டெடுத்த நாய்!

எஜமானனின் 2 வயது குழந்தையை கண்டெடுத்த நாய். கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 50- மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை மீட்க, அவரது நாய் உதவியது பார்ப்போரை கணகலங்க வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்துக் … Read more

கேரளாவில் இன்று 1,608 பேருக்கு கொரோனா உறுதி.. 7 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,608 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 1,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. 14,891 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 803 பேர் குணமடைந்தனர். இதுவரை 27,779 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா “நெகட்டிவ்”!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லையென உறுதியானது. சமீபத்தில், கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் சிக்கி, 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராய் விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்தநிலையில், கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கேரள முதல்வர் பினராய் விஜயன், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தன்னைத் … Read more