கேரள நிலச்சரிவில் மக்கள் மனதை வென்ற குவி! கேரளாவில் நாய்க்கு வழங்கப்பட்ட அரசு பணி! காரணம் இதுதானா?

கேரளாவில் நாய்க்கு வழங்கப்பட்ட அரசு பணி.

கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 60- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை குவி என்ற நாய் கண்டுபிடித்தது. இந்த நாய் ஆற்றில் எதையோ மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்த மீட்பு படையினர் சந்தேகத்தின் பெயரில், அருகில் சென்று பார்த்த போது, 2 வயது குழந்தை ஆற்றில் சிக்கிக் கொண்டிருந்ததை  பார்த்தார். இதனை பார்த்த மீட்பு படையினர் உடனடியாக அந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர்.

இதனையடுத்து, இந்த நாயின் செயலால் ஈர்க்கப்பட்ட மோப்பநாய் படைப்பிரிவு அதிகாரி அதனை தத்தெடுத்து வளர்க்க அரசிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் குவிய மோப்பநாய் படைப்பிரிவில் இணைக்கவும் பரிந்துரை செய்தார். இவரின் பரிந்துரையை ஏற்று, தற்போது இந்த நாயை மோப்பநாய் படைப்பிரிவில் இணைக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. 10  பின் குவி மோப்பநாய் படைப்பிரிவில் இணைக்கப்படும் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.