கேரள நிலச்சரிவு : எஜமானனின் 2 வயது குழந்தையை கண்டெடுத்த நாய்!

எஜமானனின் 2 வயது குழந்தையை கண்டெடுத்த நாய்.

கேரள மாநிலம் பெட்டிமுடி மற்றும் ராஜா மாலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த 50- மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானனின் 2 வயது குழந்தையை மீட்க, அவரது நாய் உதவியது பார்ப்போரை கணகலங்க வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்துக் கொண்டிருந்த போது, குவி என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று, ஆற்றில் எதையோ மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், சந்தேகமடைந்த மீட்புப்படையினர் அருகில் சென்று பார்த்த போது, 2 வயது குழந்தை ஆற்றில் சிக்கிக் கொண்டிருந்ததை  பார்த்தார். இதனை பார்த்த மீட்பு படையினர் உடனடியாக தனுஸ்காவை மீட்டனர். தனுஸ்காவின் பாட்டி மட்டுமே உயிருடன் உள்ள  நிலையில்,தனுஷிகாவின் தந்தையின் சடலம் 2 நாட்களுக்கு முன்பதாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.