காஷ்மீரில் பயங்கரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம், பக்தாம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், அப்பகுதியியல் ரகசிய சோதனை நடத்தினார்கள். அப்பொழுது அங்கிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையும் பதில் தாக்குதல் நடத்தியது. 4 மணி நேரத்துக்கும் மேலாக … Read more

காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்கலாம்- மத்திய அரசு அனுமதி..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜம்மு காஷ்மீர் முக்கிய அரசியல் கட்சி  தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.பிரிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர்,லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர்களை அதிரடியாக மத்திய அரசு நியமித்து ஆளுநரின் கட்டுப்பட்டில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்குவதற்கான சட்டத்திற்கு மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளது.இந்த அனுமதியால் இந்தியாவின் எந்த மூளையிலிருந்தும் ஒருவர் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்-22 கருப்பு தினம்: பாக்.,எதிர்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்..!

பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஆக்ரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்,.22 ந்தேதி காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தால் ஆக்கிரமிப்பு செய்தது. இதனை கண்டித்து அங்கு உள்ள முஸ்லீம்கள் அல்லாத சிறுபான்மை இனத்தவர்கள் போராட்டத்தில்  குதித்துள்ளனர். மேலும் அக்,.22ஆம் தேதி நேற்று கருப்பு தினமாக அறிவித்துள்ள அவர்கள் ஆக்கிரமிப்பு எதிராக ஆர்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஓரணியாக திரண்டு … Read more

மிகப்பெரிய சதி திட்டத்ததோடு எல்லையில் 300 பங்காளிகள் – வாலாட்டினால் நறுக்.. உசார்.,எச்சரிக்கை

யூனியன் பிரதேசமான காஷ்மீருக்குள் அதிக  எண்ணிக்கையிலான தீவிரவாதிகளை நுழைக்க பாகிஸ்தான் ராணுவம் சதித்திட்டத்தை தீட்டி வைத்துள்ளதாக உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின் படி கரேன் பிரிவுக்கு எதிரே இருக்கும் ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி ஆகிய பகுதிகளில் இருக்கும் ஏவுதளங்களில் 80 தீவிரவாத குழுக்கள் தென்படுகிறது. இது பாகிஸ்தான் ராணுவம்  கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் உள்ளது.இதிலிருந்து சதி செயலுக்கு திட்டமிட்டுவதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது,லஷ்கர்-இ-தொய்பாவை போன்ற தீவிரவாத அமைப்புகளைச் … Read more

என்கவுண்ட்டர்…போது தாகம்! தண்ணீர் கொடுத்த ராணுவம்-மனிதநேயத்திற்கு பாராட்டு

கடும் துப்பாக்கிச்சண்டைக்கு மத்தியிலும் சரண் அடைந்த தீவிரவாதிக்கு  தண்ணீர் கொடுத்த  இந்திய ராணுவ வீரர்களின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மூ காஷ்மீர் யுனியன் பிரதேசத்தில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.இச்சண்டையில் ஜஹாங்கீர் (வயது31) என்ற தீவிரவாதி ராணுவத்தினரிடன் சரண் அடைந்தான். இந்நிலையில் கடும் துப்பாக்கி சண்டைக்கு இடையே மீண்டும் தீவிரவாதி திருந்த ஒரு வாய்ப்பளித்த இந்திய ராணுவ வீரர்கள் அவனுக்கு தண்ணீர் கொடுத்தனர். சரண் அடைந்த தீவிரவாதியின் தந்தை ராணுவ … Read more

வீரமரணம் எய்திய இந்திய வீரர்கள்..எல்லையில் பாக்.,அட்டகாசம்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூனியன் பிரதேசமான காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவுகம் என்ற செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் இன்று 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததனர். பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று நள்ளிரவு அத்துமீறலில் ஈடுபட்ட பாக்.,ராணுவத்தினரிடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர்  ஒருவர் வீரமரணம் அடைந்ததாக … Read more

ஐநாவில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய துருக்கி அதிபர்… இந்தியா கடும் கண்டனம்…

ஐக்கிய நாடுகளின்  பொதுச்சபையில் காஷ்மீர் பிரச்னை குறித்து துருக்கியின்  அதிபர் எர்டோகன் பேசியது முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல’ என்று இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பொதுச்சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் உரை, வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, மாநாட்டில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் மோடியின் உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், … Read more

#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!

யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தீவிரவாதிகளின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக முடக்கியுள்ளது  தெற்கு காஷ்மீரில் கடந்த 2017ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினான சி.ஆர்.பி.எப்  முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இர்சத் அகமது ரேசி என்கிற பயங்கரவாதி  கைது செய்யப்பட்டார். இந்த பயங்கரவாதியின் தந்தைக்கு சொந்தமாக புலவாமா மாவட்டம் கல்கபோராவில் உள்ள ரத்னிபோரா பகுதியில்  வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை பயங்கரவாத செயல்பாடுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தது … Read more

புல்வாமா தாக்குதல்.! பாகிஸ்தான் வங்கியில் இருந்து 10 லட்சம் பரிமாற்றம்.! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.!

புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மருமகன் முகமது உமர் பருக்கிற்கு தாக்குதலை நடத்துவதற்கு 10 லட்சம் ரூபாயானது பாகிஸ்தானில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. – NIA குற்றப்பத்திரிக்கை. புல்வாமா பயங்கர தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு துறையான NIA செவ்வாய்க்கிழமையன்று 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதில் 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் புல்வாமா எனும் … Read more

காஷ்மீரில் தொடர்ந்து பாஜக தலைவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு.!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புட்கம் மாவட்டத்தில் மொஹிண்ட்போரா பகுதியில் வசிக்கும் அப்துல் ஹமீத் நஜர் (38)  இன்று காலை  நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, ஓம்போரா அருகே அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடந்த ஒரு வாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது தாக்கல் நடைபெற்று வருகிறது. இது மூன்றாவது தாக்குதல் ஆகும். இதற்கு முன் கடந்த புதன்கிழமை  தெற்கு காஷ்மீரில் காசிகுண்டில் உள்ள பாஜக … Read more