அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

அசாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அசாமில் உள்ள கோக்ராஜர் மாவட்டத்தில் இன்று அதிகாலை போலீசாருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் புதிதாக யுனைடெட் லிபரேஷன் ஆஃப் போடோலாண்ட் (யுஎல்பி) குழுவின் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இம்மாவட்டத்தில் உள்ள உல்தபாணி ரிசர்வ் வனப்பகுதியில் இந்த என்கவுன்டர் நடந்ததுள்ளது. தீவிரவாதிகளின் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து,  அந்தப் பகுதியில் இருந்த இரண்டு பிஸ்டல்கள் (9 மிமீ மற்றும் 7.65 மிமீ), எட்டு ரவுண்ட் லைவ் … Read more

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.  தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி … Read more

ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்..!

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹ்மத் பல புல்லட் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், பகல் 1.35 மணியளவில், பயங்கரவாதிகள் கன்யார் பகுதியில் உள்ள போலீஸ் நாகா பார்ட்டி மீது துப்பாக்கிச் சூடு … Read more

ஸ்ரீநகர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை..!

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் … Read more

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் : முக்கியமான 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு போலீசார் நடத்தில் துப்பாக்கி சூட்டில் முக்கியமான 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் … Read more

காஷ்மீர் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை..!

காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  காஷ்மீரில் நடந்த இந்த பயங்கர தாக்குதலில் தீவிரவாதிகளால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு குண்டு அடிபட்டது.  இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும், இதனை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது தனமண்டி வனச்சரக பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி … Read more

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் தீவிரவாதி சுட்டுக்கொலை..!

காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது துப்பாக்கி தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதில், பாதுகாப்பு படை வீரர்களால் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளார்.  காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர்.  இந்த சமயத்தில் நேற்று முன்தினம் காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற … Read more

காஷ்மீரில் துப்பாக்கி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..!

காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது துப்பாக்கி தாக்குதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் தற்போது அதிகரித்து வரும்நிலையில் அதனை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படை வீரர்களும், காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தீவிரவாதிகளை கண்காணித்து அவர்களை கண்டால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது போன்ற தாக்குதலில் சில தீவிரவாதிகள் கொல்லப்பட்டும் வருகின்றனர்.  இந்த சமயத்தில் நேற்று காலை பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். அதனை பாதுகாப்பு … Read more

தீவிரவாத தாக்குதலில் திரிபுராவின் எல்லைப்பாதுகாப்பு படையினர் இருவர் பலி..!

திரிபுராவில் ஏற்பட்ட தீவிரவாத துப்பாக்கி தாக்குதலின் போது இரண்டு எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.  திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து எல்லைப்பாதுகாப்பு படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த தீவிரவாத படையினர் பாதுகாப்பு படை மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பும் துப்பாக்கி சண்டை நடத்தியுள்ளனர். இதில் துணை ஆய்வாளர் உட்பட இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பாதுகாப்பு … Read more

ஆப்கானிஸ்தான்: ஒரே நாளில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 254 தலிபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 254 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் தாலிபான்களை அடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவம் நேற்று ஒருநாள் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 254 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை … Read more