கன்னியாகுமரியில் கோவில் கோவிலாக சுற்றி வரும் நயன்தாரா.!

நடிகை நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நேற்று மாலை சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் நயன்தாரா தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக   நடிகை நயன்தாரா விரதமும் இருந்து வருகிறார். இப்படத்தை ஆர். ஜே பாலாஜி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் உள்ள சில நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் … Read more

கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்..!

கேரளா மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம்  28-ம் அதிரடிப்படையிருக்கும் , மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்த பெண் மாவோயிஸ்ட்டு யார் என தெரியாமல் இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் கிராமத்தை சார்ந்தவர் அஜிதா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கச்சென்று உள்ளார்.அதன் பின்னர் … Read more

கனமழை எதிரொலி ! பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று  ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

தொடர் கனமழை மழை எதிரொலி ! கன்னியாகுமரி,சிவகங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழையால் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை … Read more

ரூ.77000 கள்ள நோட்டு ! குமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது 

கன்னியாகுமரியில்  கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு புகார் ஓன்று வந்தது.இதனை தொடர்ந்து  கன்னியாகுமரியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கண்காணித்து வந்தனர். இதனை தொடர்ந்து சபத் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த நபர் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் ரூ.200,500 அச்சடிக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.77000 மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்தது போலீசார். தீவிர விசாரணை … Read more

கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும்!பாஜக தொடர்ந்து நெருக்கடி!தினகரன் தகவல்

கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர் என்று தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை … Read more

கன்னியாகுமரியில் விபத்து 2 பேர் சம்பவ இடத்திலே பலி ….!!

கன்னியாகுமரியில் வாகனம் மற்றும் பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்துலே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடியதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியின் அருகே இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் மேம்பாலத்தில் அருகே 3 பேர்  இருசக்கர வாகனத்தில் சென்றனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் … Read more

உதயமானது புதிதாக 2 மாநகராட்சிகள்!!தமிழகத்தில் மொத்தம் 14 மாநகராட்சிகள்!!

ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை முழுக்கமுழுக்க கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகுறித்த விஷயங்களையே பேசினேன்.திருவாரூர் தேர்தல் குறித்து பாஜகமாநில தலைவர்தான் முடிவு செய்யவேண்டும் … Read more

புதிதாக 2 மாநகராட்சிகள் உதயம்!!சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கலாகிறது!!

ஓசூர், நாகர்கோவில் ஆகியவற்றை மாநகராட்சிகளாக மாற்றுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 5 ஆம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி முதல்வரிடம் பேசினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை முழுக்கமுழுக்க கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகுறித்த விஷயங்களையே பேசினேன்.திருவாரூர் தேர்தல் குறித்து பாஜகமாநில தலைவர்தான் முடிவு செய்யவேண்டும் என்று  மத்திய … Read more

குமரியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி…!!!

அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குமரியில் சிறப்பு திருப்பலிக்கு நடைபெற்றது. அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குளச்சல் மீன்பிடி துறைமுக நடவடிக்கை குழு சார்பில் உலக மீனவர் தின திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியை முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி நடத்தினார். அதன் பின் புனித நீர் ஊற்றி மீன்பிடி கருவிகளையும், கடலையும் அர்ச்சித்தார். இந்த திருப்பலியில் அனைத்து மீனவ பொதுமக்களும் கலந்து கொண்டனர்.