நாயை விழுங்க நினைத்த 12 அடி மலைப்பாம்பை பிடிப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு பிடிப்பு. கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள ஒரு மலைப்பாம்பு அந்த பகுதியில் உள்ள ஒரு நாயை விழுங்க முயற்சி செய்துள்ளது, இதனால் அந்த 12 அடி மலைப்பாம்பை பார்த்து பொதுமக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் மலைப்பாம்பை பற்றி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் உடனடியாக தகவல் … Read more

இந்த இரண்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வெப்பசலனம் காரணமாக நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20 … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து இயக்கம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை இயக்கம் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை இயக்கம்,காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் ஓடும் என எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். தற்போது தலைமை செயலகத்தில் பேட்டி கொடுக்கையில் அரசு பேருந்தில் வழக்கமாக கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கன்னியாகுமாரி பேருந்து நிலையத்திலுள்ள மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் ஓடத் தொடங்கும் அரசு பேருந்துகளில் வழக்கமான கட்டணமே … Read more

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் இருந்த மீனவர் உயிரிழப்பு.!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான்.  இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார்.  இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று திடீரென உயிரிழந்தார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை.இவரது மகன் சவூதி அரேபியாவில் பணியாற்றி … Read more

3 நாளில் ரூ.7,000,000 மீன் வர்த்தகம் பாதிப்பு.!பெரும் இழப்பை சந்தித்த குமரி மீனவர்கள்!!

நாகர்கோவில் விற்பனை ஆகாமல் துறைமுகங்களில் மீன்கள் தேக்கம் அடைந்துள்ளதால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.7கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளன.இதற்கெல்லாம் காரணம் உலகையே அச்சுறுத்தும் கொரோனா தான் வேற யாரும் இல்லை,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் சந்தைகள் மூடப்பட்டன. கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக முடங்கியுள்ளதால் எப்படியும் வருகின்ற 31-ம் தேதி வரை இது நிகழும் என்று தெரிந்ததே, இதனால் மீன்கள் விற்பனை … Read more

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: என்ஐஏவுக்கு மாற்றம்

கன்னியாகுமரி களியக்காவிளை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து இந்த கொலையில் குமாரி மாவட்டத்தை சார்ந்த அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் … Read more

திருவள்ளுவர் சிலையை உடனே சீரமைக்க வேண்டும்- முதலமைச்சருக்கு எம்.பி. ரவிக்குமார் கடிதம்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.  திருவள்ளுவர் சிலை முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் அதனை உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் பழனிச்சாமிக்கு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திருவள்ளுவரை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு திருவள்ளுவருக்கு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரத்தில் அவருக்கு சிலை அமைத்தது. இந்த சிலை அமைக்கும் பணி 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 -ஆம் தேதி தொடங்கப்பட்டு  … Read more

#BREAKING : எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் -முதலமைச்சர் அறிவிப்பு

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.  வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி என்று  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில்  மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர். இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. … Read more

எஸ்.ஐ. கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியானது.!

நேற்று இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரின் புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில்  மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை … Read more

வைரல் வீடியோ :ஊராட்சி மன்றத்தில் “தமிழ் தாய் வாழ்த்து பாடலை”தவறாக ஊராட்சி மன்ற உறுப்பினர் .!

 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை ஊராட்சி  மன்றத்தில் இன்று  பதவியேற்பு விழா நடைபெற்றது அவர் பாடிய தமிழ்தாய் வாழ்த்து பாடலில் “சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என பாடுவதற்கு பதிலாக  “சீராலும் கடலமென திகபறந்த கண்ட நபில்” என பாடி உள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக  உள்ளாட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் ,  மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு … Read more