இறுதி அஞ்சலியில் குமுறி குமுறி அழுத ஸ்டாலின்,துரைமுருகன் ..!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு மரணமடைந்தார். இதையடுத்து  மருத்துவமனயிலிருந்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில்  கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மாலை 4 மணிக்கு மேல் அன்பழகன் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்,  எம்.பி, கனிமொழி  டிஆர் பாலு, உதயநிதி , வைரமுத்து உள்ளிட்ட பலர் இறுதி … Read more

மறைந்தார் பொதுச்செயலாளர் க அன்பழகன்…மு.க ஸ்டாலின்…தொண்டர்கள் அஞ்சலி

மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது  உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு   சிறப்பு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல் … Read more

வயது முதிர்வின் காரணமாக அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை -ஸ்டாலின் ..!

கடந்த மாதம்  24-ம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக  தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.  இந்நிலையில் நேற்று  சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்சென்று  க.அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் … Read more

யாரும் மார்ச்-1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வேண்டாம் – திமுக தலைவர் வேண்டுகோள்

மார்ச்1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மார்ச்1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட யாரும் மார்ச் 1ம் … Read more

மருத்துவமனையில் கவலைக்கிடமாக அன்பழகன்.!

கடந்த 24-ம் தேதி   தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வரின் உடல்நிலை கவலைக்கிடடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 24-ம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக  தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினமும் , நேற்றும் மருத்துவமனைக்கு நேரில்  சென்று … Read more

திமுக பொதுக்குழுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என க.அன்பழகன்  கூறியுள்ளார். மேலும் திமுக பொதுக்குழுக் கூட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பொதுசெயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.