மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை விட்ட பொதுச்செயலாளர் சசிகலா.!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினத்தை சென்னை தி நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து சசிகலா ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் … Read more

சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்திப்பு.!

சென்னை தி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்தித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. இதையடுத்து, சென்னை தி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்து வந்த நிலையில், சசிகலாவிடம் சரத்குமார் சந்தித்துள்ளார். … Read more

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம் திறப்பு.!

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மெழுகு சிலையுடன் அமைந்துள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறப்பு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் ஜெயலலிதா புகைப்பட தொகுப்பு, விருதுகள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவை காப்பாற்றுவேன்., பிப்.24ல் தீபம் ஏற்றுங்கள் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டறிக்கை.!

என் இல்லம் அம்மாவின் இல்லம் என்று நினைத்து மாலை 6மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியீடு. வரும் பிப் 24-ஆம் தேதி மறைந்து முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பிப் 24-ஆம் தேதி … Read more

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என உறுதிமொழி ஏற்போம்- அமமுக

தமிழகம்,புதுச்சேரி ,கர்நாடகாவில்  உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்த  வேண்டும் என்று அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் இது தொடர்பாக அமமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், வரும் 24.02.2021 அன்று, … Read more

#BREAKING: ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு.!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி … Read more

ஜெயல‌லிதா பிறந்த நாள் :72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

ஜெயல‌லிதாவின் பிறந்தநாளையொட்டி 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி. இன்று அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் ஆகும்.இதனை கொண்டாட அதிமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயல‌லிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதன் பின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகளை … Read more

வரலாற்றில் இன்று(24.02.2020)…தமிழகத்தின் அதிசயம் செல்வி.ஜெ. ஜெயலலிதா பிறந்த தினம் இன்று….

தமிழக வரலாற்றில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆண்கள் மட்டுமே களம் கண்ட தமிழக அரசியலில் தனிப்பெரும் சக்தியாய்…. வாழ்க்கையின் இறுதி நிமிடம் வரை போராடி வாழ்ந்து மறைந்தவர் செல்வி.ஜெ. ஜெயலலிதா. இத்தகைய இரும்பு பெண்மணியாய் திகழ்ந்த இவரை அம்மா… என்ற லட்சக்கணக்கணக்கான தொண்டர்களின் அன்புக்குரிய அழைப்பால் அழைக்கப்பட்டவர். அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் அதுவரை தமிழகத்தில் கோலோச்சி இருந்த திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்.. ஒன்றல்ல.. இரண்டல்ல.. 13 ஆண்டுகள் அரசியல் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர். அதேபோல் ஜெயலலிதாவும் … Read more