ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என உறுதிமொழி ஏற்போம்- அமமுக

தமிழகம்,புதுச்சேரி ,கர்நாடகாவில்  உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்த  வேண்டும் என்று அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் இது தொடர்பாக அமமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், வரும் 24.02.2021 அன்று, சென்னை தாம்பரத்தில் நடைபெறுகிறது.தமிழகம்,புதுச்சேரி ,கர்நாடகாவில்  உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்த வேண்டும்.ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என உறுதிமொழி ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.