குஜராத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டுபிடிப்பு. அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வகை கொரோனாவை விட XBB.1.5 வகை கொரோனா 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது அந்தவகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் மறைவு – குஜராத் செல்கிறார் முதலமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக குஜராத் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்றார். இதன்பின் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயார் … Read more

ரூ.300 கோடிக்கான ஆயுதங்கள்.. போதைப் பொருள்கள்.. இந்திய எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தான் படகு.!

ரூ.300 மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் படகு குஜராத் கடற்கரையில் பிடிபட்டது. இந்திய கடலோர காவல்படையினர், ATS குஜராத்வுடன் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், குஜராத்தில் இந்திய கடற்பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகை பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்துள்ளனர். இதில், ரூ.300 கோடி மதிப்பிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் பாகிஸ்தான் படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக பாகிஸ்தான் படகு ஓகாவுக்கு கொண்டு … Read more

பல்கலைக்கழக தேர்வில் காதலனுக்காக ஆள்மாறாட்டம் செய்த காதலி.! பட்டம் பறிபோன சம்பவம்…

குஜராத்தில் தனது காதலனுக்காக தேர்வெழுத சென்று தனது கல்லூரி பட்டத்தை ஒரு பெண் இழந்துள்ளார். காதலனும் 3 ஆண்டுகள் தேர்வெழுத கூடாது என கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  குஜராத் வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் (VNSGU) 3ஆம் ஆண்டு பிகாம் படிக்கும் மாணவன் ஒருவர் உத்தராகாண்ட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த சமயம் தேர்வெழுத வேண்டி இருந்ததால், அந்த மாணவனுக்கு பதில் அவரது காதலி பரீட்சை எழுதியுள்ளார். அந்த மாணவனது ஹால் டிக்கெட்டில் அவரது புகைப்படத்திற்கு … Read more

மனைவிக்கு ‘முத்தலாக்’ கூறிய பாஜக பிரமுகர்.! வழக்குப்பதிவு செய்த போலீசார்.!

குஜராத், பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா, அவர் மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறையின் படி தலாக் (விவாகரத்து) என மூன்று முறை கூறினால் கணவன் – மனைவி பிரிந்துவிட்டதாக அர்த்தம் என கூறப்பட்டு வந்தது. இந்த முத்தலாக் இஸ்லாமிய முறைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 2017ஆம் ஆண்டே தீர்ப்பு வழங்கியுள்ளது.   அண்மையில், குஜராத் மாநிலம் மெஹ்சானாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது … Read more

திருமணம் செய்துக்கொள்ள சம்மதிக்காத காதலி..! காதலனின் வெறிச்செயல்..!

குஜராத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் தனது காதலியை 49 முறை கத்தியால் குத்தினார். குஜராத்: ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரைச் சேர்ந்த நபர் ஜகந்நாத் கோடா. இவர் குனிடர் சீமாதாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிக்கும் நிலையில் கோடா தனது காதலி சீமாதாஸிடம் நம் திருமண செய்துகொள்வோம் என்று கேட்டுள்ளார். அதற்கு சீமா ஒப்புக்கொள்ளாமல் தாமதப்படுத்தி உள்ளார். மீண்டும் மீண்டும் திருமணம் பற்றி கேட்டும் அவர் மறுத்த நிலையில் கோபமடைந்த கோடா, சீமாவைத் தன்னுடன் … Read more

குஜராத்தில் முதலமைச்சரை தொடர்ந்து 16 அமைச்சர்கள் பதவியேற்றனர்!

முதல்வராக பூபேந்திர படேலை தொடர்ந்து 11 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 6 மாநில அமைச்சர்கள் பதவியேற்பு. பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுக்கொண்டார். பூபேந்திர படேலுக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள 8 அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதில், குஜராத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஹர்ஷ் சங்கவி, … Read more

#Breaking : குஜராத்தில் 18வது முதல்வராக பதவியேற்றார் பூபேந்திர ரஜினிகாந்த் படேல்.!

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர  ரஜினிகாந்த் படேல் பதவியேற்றார். நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி. தொடர்ந்து 7வது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பூபேந்திர ரஜினிகாந்த் படேல் தான் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பூபேந்திர  படேலுக்கு … Read more

#Gujarat & Himachal: இரு மாநில முதலமைச்சர்களும் முன்னிலை!

குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை. குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில், குஜராத் மற்றும் ஹிமாச்சல் முதல்வர்கள் அந்தந்த தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் கட்லோடியா மற்றும் செராஜ் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் படேல் 23,713 … Read more

#GujaratElection2022: குஜராத்தில் பாஜக அபார முன்னிலை!

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் 144 இடங்களில் அபார முன்னிலை. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளிலும், டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான … Read more