மகனை மீட்க வேண்டும் ! தாய் தொடர்ந்த வழக்கில் நித்தியானந்தாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் நித்தியானந்தாவிற்கு 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது நீதிமன்றம்.   நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இது ஒருபுறம் இருந்தாலும் தினம் தினம் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து  சர்ச்சையில் சிக்கி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான பிடதி என்ற ஆசிரமம் … Read more

சத்தியமங்கலம் காட்டில் பறவை, வண்ணத்துப்பூச்சி இனங்கள் வழக்கத்தை விட அதிகம்.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. இதில் 201 வகையான பறவை இனங்கள் மற்றும் 157 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இயற்கையின் அழகை ரசிப்பது எவ்வளவு பிடிக்குமோ, அதேபோன்று காடுகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயலாகும். இதில் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற பறவை மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அதில் 1408 … Read more

பத்தடி குழியில் மௌன விரதம் இருக்கும் சாமியார்..!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் கிராமத்தை சேர்ந்தவர், விஸ்வநாதன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிமாக உள்ள காரணத்தினால், கடந்த 15ஆம் தேதி துறவறம் மேற்கொண்டார். இவர், அமர்நாத் யாத்திரை சென்று வந்தார். அதன் பின், விஸ்வநாதன் என்ற பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சுவாமிகள் என மாற்றி கொண்டார். இவர், தனது சொந்த இடத்தில 10 அடிக்கு ஒரு பள்ளம் தோண்டினார். அதில் அவர் 48 நாள் … Read more

சம்மட்டி மற்றும் இரும்பு கம்பிகளால் சிலைகளை அடித்து உடைத்த மர்ம கும்பல்..!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தொப்பபாளையத்தில் காளியண்ணன் கோவில் உள்ளது.இங்கு காளியண்ணன், விளைய காளியண்ணன் என்ற இரண்டு சிலைகள் 6 அடி உயரத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கதவை உடைத்து உள்ளே  மர்ம கும்பல் புகுந்தனர். அவர்கள் அனைவரும் முகம் தெரியாதவாறு தங்கள் முகத்தை துணியால் மூடி இருந்தன. உள்ளே சென்ற அவர்கள்  காளியண்ணன், விளைய காளியண்ணன் ஆகிய இரண்டு சிலைகள் அடித்து நொறுக்கினர். அந்த  இரண்டு சிலைகளையும் சம்மட்டி மற்றும் இரும்பு கம்பியால் … Read more

43வது முறையாக தனது முழுகொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு  நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 76 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் முழுகொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. இதன்காரணமாக 35,500 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி … Read more

விநாயகர் சதுர்த்தி எதிரொலி !ஈரோட்டில் தொடரும் கைது நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் உள்ள ஈரோட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடத்திட  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் கடந்த சில நாட்களாக நாட்களாக  இரவு பகல் என்று பாராமல் … Read more

வீட்டில் அனைவரும் இருக்கும் போதே 62 நகையை அபேஸ் செய்த பலே திருடர்கள்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரகுபதிநாயகன் பாளையத்தில் தொழிலதிபராக இருக்கிறார் ராஜா. இவர் அதே பகுதியில் கெமிக்கல் ஆலை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் தான் 62 சவரன் நகைகளை திருட்டு கும்பல் ஒன்று திருடியுள்ளது. திருட்டு நடந்த இரவு, அனைவரும் நன்றாக தூக்கியுள்ளனர். வீட்டில் நுழைய முதலில் வீட்டில் இருந்த நாயை அடித்துள்ளனர். வீட்டில் சிசிடிவி காமிரா இல்லாததை தங்களுக்கு சாதகமாக்கி உள்ளே நுழைந்துள்ளனர். அனைவரும் நன்றாக தூங்குவது அறிந்து, ஈசியாக 62 சவரன் நகைகளை பீரோவில் … Read more

மதுபோதையில் கத்திக்குத்து! சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியை கண்டுபிடித்தது போலீஸ்!

ஈரோடு மாவட்டம் நாடார்மேடு எனும் பகுதியில், உள்ள மதுக்கடையில் மஞ்சுநாதன் செந்நிதில் குமார் ஆகியோர் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது மஞ்சுநாதத்திற்கும், செந்தில்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மஞ்சுநாதனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அடுத்து மஞ்சுநாதனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்க அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அருகில் ள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU

ரூ 5,25,000 வரை வாழைத்தார் விற்பனை…விவசாயிகள் மகிழ்ச்சி…!!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கு வாழைதார்கள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தேன்வாழை, மொந்தன், கதளி, பூவாழை உள்ளிட்ட பல்வேறு வாழை ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடி செய்த வாழைகளை கோபி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏலம் விடப்படுகிறது. வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வாழைத்தார்கள் விலைக்கு வாங்கப்பட்டன. வாழைத்தார் … Read more

ரசாயனம் கலக்கப்பட்ட 2,300 கிலோ வெல்லம் பறிமுதல்

ஈரோடு அருகே வெல்லம் விற்பனை மையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் கலக்கப்பட்ட 2 ஆயிரத்து 300 கிலோ வெல்லம், அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோட்டை அடுத்துள்ள சித்தோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் விற்பனை மையத்தில், தமிழக வியபாரிகள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வெல்லம் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மற்றும் அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் ரசாயனம் … Read more