ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி காலமானார்!

Ganesha Moorthy

Ganesha Moorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 3வது முறை எம்பியாக இருந்து வந்த நிலையில், ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி சிட்டிங் எம்பியாக இருந்து வந்தார். இந்த சூழலில் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் … Read more

தைப்பூச நாளில் கோயில் தேர் சரிந்து விழுந்து விபத்து.!

Sathyamangalam - Thaipoosam

ஈரோடு மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை ஒட்டி நடந்த திருவிழாவில் தேர் சரிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. இன்றைய … Read more

சட்டவிரோத வேட்டை..! வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.! நாட்டு துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்த கும்பல்.!

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. இதனை அறிந்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளானர் இதில், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு வனத்துறையினரை சுட்டுள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தி வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். இந்த தேடுதல் … Read more

மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த விவகாரம்.! வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியை கைது.! 

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாலக்கரை பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் 32 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் குரிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டும் தலைமை ஆசிரியை உத்தரவின் பேரில் கழிவறை சுத்தம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில், மாணவ மாணவியரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியை … Read more

இன்று வந்ததற்கு 5 லட்சம் லாபம்.! மேடையில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பான பேச்சு.!

இன்று விழாவுக்கு வந்ததற்கு எனக்கு 5 லட்சம் லாபம். அது எனக்கில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுகாக திமுக நிர்வாகி செந்தில் வழங்கிய நிதியுதவி என கலகலப்பாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் பெருத்துறையில் திமுக நிர்வாகி வீட்டு திருமண விஷேசத்திற்கு சென்றுள்ளார்.  நாளை திருமண விழா நடைபெறுவதை ஒட்டி, இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசுகையில், திமுகவில் இளைஞரணி … Read more

#BREAKING: சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து! – உயர் நீதிமன்றம்

ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து. கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். கருமுட்டை விவகாரத்தில் இராசு சுதா மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு … Read more

#BREAKING: கருமுட்டை விவகாரம் – ஸ்கேன் சென்டர் சீலை அகற்ற உத்தரவு!

சிறுமி கருமுட்டை வழக்கில் தனியார் ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு. ஈரோடு சிறுமி கருமுட்டை வழக்கில் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீலை அகற்றக்கோரி தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவமனை மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. புதிய நோயாளிகளை சேர்க்க தடை விதித்த அரசு உத்தரவையும் … Read more

#Justnow:கருமுட்டை விவகாரம் – பாதிக்கப்பட்ட சிறுமி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி?..!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர்,கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த … Read more

#JustNow: சிறுமியின் கருமுட்டை விற்பனை – 2 மருத்துவமனைக்கு சம்மன்!

கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்.  ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கருமுட்டை விற்பனை தொடர்பாக சிறுமியின் தாய் உள்ளிட்ட பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் … Read more

#BREAKING: கருமுட்டை விற்பனை – மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை!

சிறுமியின் கருமுட்டையை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 2 மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இவர்களிடம் 16 வயது சிறுமியிடம் 4 ஆண்டுகளாக கருமுட்டை … Read more