பொதுச்செயலாளர் பதவி! எடப்பாடி தரப்பு பதிலளிக்க அவகாசம் தந்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு!

delhi high court

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த முடிவுக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அவகாசம் அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க 6 வாரம் அவகாசம் தந்து டெல்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த முடிவுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன், கேசி சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதிமுக பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சியின் சட்ட விதிகள் மாற்றம், தீர்மானங்களை ஏற்றது … Read more

இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

THANAPAL

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து ஆணையிட்டுள்ளது. வழக்கில் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் … Read more

முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்? – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேட்டி!

ADMK Chief Secretary Edapadi Palanisamy

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார்.  36 இஸ்லாமிய கைதிகள் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுவதாக பேரவையில் இபிஎஸ் பேசினார். இந்த தீர்மானத்திற்கு ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் ஆகிய எம்எல்ஏக்கள் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் 39 இஸ்லாமியர்கள் விடுதலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. … Read more

36 இஸ்லாமிய கைதிகள் விடுதலை… இபிஎஸ் தீர்மானம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்.! 

Tamilnadu CM MK Stalin - Edappadi Palanisamy

1998ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு 20 – 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க கோரி இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனை செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே.மணி , ஜெகன் மூர்த்தி, பூமிதான் ஆகிய எம்எல்ஏக்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த தீர்மானத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், … Read more

கர்நாடக அரசுடன் நட்பு ரீதியாக பேசியிருந்தால் காவிரி நீர் கிடைத்திருக்கும்.! எடப்பாடி பழனிசாமி  பேட்டி.! 

ADMK Chief Secretary Edappadi Palanisamy

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக  தனித்தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீதான காரசார விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களுக்கு , முதல்வர் மு.க.ஸ்டாலின்  , அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பதில் தகவல்கள் மற்றும் தீர்மானம் குறித்த விளக்கங்களை கூறினர். இறுதியில் இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் … Read more

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான்.! எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்.! 

ADMK Chief Secretary Edappadi Palanisamy

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதில் கூறினார். குறிப்பாக ஆசிரியர்கள் போராட்டம், அண்ணாமலை கூறிய பாஜக vs திமுக விவகாரம், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றிய விவகாரம் என பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டார். கடந்த 8 நாட்களாக பகுதிநேர மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராடியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வருவதற்கு … Read more

அக்.9ம் தேதி சென்னையில் அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

ADMK Chief Secretary Edappadi Palanisamy

சென்னையில் அக்.9ம் தேதி அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ‘உழைப்பவரே உயர்ந்தவர்’, ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழிகளை தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வரும் தொழிலாளர்கள், அனைத்து நிலைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அதிமுக ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியும், எண்ணற்ற உதவிகளை செய்தும், தொழிலாளர்களுடைய நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு … Read more

போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை.!

ADMK Chief Secretary Edappadi Palanisamy

ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும்,  வேலைக்கேற்ற உரிய ஊதியம், வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை முக்கிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2,500 வரையில் தொகுப்பூதியம் உயர்த்தி … Read more

தமிழக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு

ADMK Chief Secretary Edappadi Palanisamy

திமுக அரசு, கர்நாடக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே விஸ்பரூபம் எடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் , உச்சநீதிமன்றம், மத்திய அரசு வரை சென்று தொடர்ந்து … Read more

மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி – இபிஎஸ் பேச்சு

Edappadi Palanisamy

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, பல்வேறு நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமியை தலைவராகவும், முதல்வராகவும் ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் … Read more