தேவர் குருபூஜைக்கு செல்லும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

ADMK Chief Secretary Edappadi Palanisamy

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்கிறார் என தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், பல்வேறு சிறப்புகளுக்குரிய உள்னதத் தலைவரான தேவர் திருமகனாரின் 116-ஆவது பிறந்த நாள் மற்றும் 61-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் 30ம் தேதி காலை 10 மணியாவில், ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமவனாரின் நினைவிடத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவிடத்துக்கு செல்லும் … Read more

எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Edapadi Palanisamy

முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் கேசி பழனிசாமி. இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக போலி உறுப்பினர்கள் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாமிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு … Read more

முதல்வருக்கு பயம் வந்துவிட்டது! அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி – இபிஎஸ் உறுதி!

Edappadi Palanisamy

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இது பாஜகவுக்கு பெரும் பேரிடியாக அமைந்தது. தமிழகத்தில் கணிசமான இடங்களில் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு, அதிமுக விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தேர்தல் நெருங்கும்போது பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் உருவாகும் என அரசியல் கட்சிகள் விமர்சித்தது. ஆனால், இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளேம் என … Read more

பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை – இபிஎஸ்

ADMK Chief Secretary Edappadi Palanisamy

அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டுசென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்பட 82 பேர் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ளனர். நடாளுமன்ற … Read more

அதிமுகவினரை பிரிக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்! – எஸ்.பி வேலுமணி பேட்டி

sp velumani

அதிமுகவின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர். இதுபோன்று,  அதிமுக துவங்கி 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கோவையில் கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்த பிறகு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா … Read more

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்! – இபிஎஸ்

ADMK Chief Secretary Edappadi Palanisamy

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும். கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் … Read more

எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்க – ஐகோர்ட்டில் “கோ வாரண்டோ” வழக்கு தாக்கல்!

Edapadi palanisamy

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்து, அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை மறைத்ததற்காக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் … Read more

இபிஎஸ் தலைமையில் 17ம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்!

ADMK Chief Secretary Edappadi Palanisamy

அதிமுகவின் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் வாரும் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேரடையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவை அதிமுக கழட்டிவிட்டது. இதன்பின் இரு தலைவர்களும் மவுனம் காத்து வந்ததால், மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. … Read more

நீதிமன்ற தீர்ப்பையே சபாநாயகர் அப்பாவு ஏற்கவில்லை.. இபிஎஸ் குற்றச்சாட்டு!

Edappadi Palanisamy

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை. இருக்கைகள் ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை. சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன் … Read more

இருக்கை விவகாரம்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்.. பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

AIADMK walk out

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம். 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை. அதாவது, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய … Read more