இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

election commission of india

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவித்து, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கும் அழியாத “மை” தயாரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. மறுபக்கம், கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் … Read more

#BREAKING: குஜராத்தில் டிச.1, 5ல் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் – தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநில  சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் … Read more

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. டெல்லியில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்கிறார். சமீபத்தில் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று குஜராத்துக்கு அறிவிக்கப்படுகிறது. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் … Read more

#BREAKING: இவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையம்

17 வயதானவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு. நாட்டில் 17 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, 17 வயது நிரப்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய … Read more

PresidentElection:இன்று முதல் வேட்புமனு தாக்கல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில்,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஜூன் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

பெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமரின் புகைப்படத்தை அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்றுங்கள் – இந்திய தேர்தல் ஆணையம்

புதுச்சேரி உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள்,கட்சி கொடிகள் ஆகிவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது வழக்கமான நடைமுறை.இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரபடுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தேதி அறைவிக்கப்பட்டுவிட்டதால் இவ்வாறு வைத்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று … Read more

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க பரிந்துரை.!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது பற்றி சட்ட … Read more