குஜராத்தில் வரலாறு காணாத வெற்றி.! பிரதமர் மோடிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து.!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டிவீட் செய்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளில் வென்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் … Read more

குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா!

குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம். குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. ஆரம்ப முதல் தற்போது வரை குஜராத்தில் பாஜக மாபெரும் வரலாற்று முன்னிலையில் இருந்து வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் … Read more

குடும்பத்துடன் வாக்களித்த அமித்ஷா.! வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்ட முக்கிய வேண்டுகோள்.!

முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தனது வாக்கினை கட்டாயம் செலுத்த வேண்டும். – மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்.  குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட (இறுதிக்கட்ட) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலேயே பிரதமர் மோடி அகமதாபாத் சபர்மதி தொகுதியிலின் தனது வாக்கினை செலுத்தினார். அடுத்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாக்கினை அகமதாபாத்தில் தனது மகன் ஜெய்ஸா  உள்ளிட்ட குடும்பத்தாருடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார். வாக்களித்துவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று … Read more

குஜராத்தில் ஜனநாயக திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.! பிரதமர் மோடி பேட்டி.!

குஜராத் மக்களால் இன்று ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. – குஜராத் தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி.  குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், இன்று 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது.  இதனைத்தொடர்ந்து, குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 14 மாவட்டங்களில் 93 … Read more

குஜராத் தேர்தல்: முதலமைச்சர் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூட்டத்தில் காளை மாட்டை அவிழ்த்து விட்ட பாஜக. குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக டிச. 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல்  பிரச்சாரம் இன்று … Read more

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! பாஜக. காங்கிரஸ்.. ஆம் ஆத்மி… குஜராத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு.?

குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது.  குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, முக்கிய தலைவர்கள் … Read more

#GujaratElection2022: காங்கிரஸில் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்!

குஜராத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் இணைந்தார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. குஜராத்தில் முதல் கட்டமாக தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 89 தொகுதிகளில் … Read more

#BREAKING: குஜராத் தேர்தல் – வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ஜடேஜா மனைவிக்கு வாய்ப்பு!

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார் என பாஜக அறிவிப்பு. குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் அறிவித்துள்ளார். கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் போட்டியிட உள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது. இதுபோன்று, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி.!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  குஜராத் சட்டமன்ற தேர்தல்  மொத்தம் 182 தொகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முதற்கட்ட தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளது. … Read more

#BREAKING: குஜராத்தில் டிச.1, 5ல் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் – தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநில  சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் … Read more