அருணாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்..!

அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று மாலை 5.35 மணியளவில் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சங்லாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4  ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்திலிருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும், பூமிக்கு அடியில் 110 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டது குறித்த தகவல் இதுவரை … Read more

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்..!

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நியூலாந்தில் உள்ள கெர்மடெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருக்கிறது. மேலும், இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்..!

இன்று அதிகாலையில் அந்தமான் நிக்கோபார் தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.25 மணியளவில் சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு போர்ட் பிளேயரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட … Read more

ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்திலிருந்து தென்கிழக்கில் 81 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும், பூமிக்கு அடியில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக … Read more

அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம்..!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ஹோண்டுராஸில் உள்ள பினலேஜோ என்ற பகுதியிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

#Breaking:தொடரும் நிலஅதிர்வு -ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு…!

ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு  ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் … Read more

#Breaking:சென்னை அருகே நில அதிர்வு – தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, ஆந்திரா அருகே 320 கிமீ தொலைவில் வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது,பெசன்ட் நகர்,ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன. எனினும்,சுனாமி குறித்த எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. Chennai Shakes from Bay of … Read more

அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம்..!

இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஹைதி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,207ஆக உயர்வு!

ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 2,207 பேர் உயிரிழந்துள்ளனர்.  வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. இப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more