அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம்..!

இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று காலை 11.21 மணியளவில் ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு இடங்களில் உணரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்திற்காக சுனாமி எச்சரிக்கை … Read more

டெல்லியில் மிதமான நிலநடுக்கம்..!

டெல்லியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மதியம் 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக அசாம், மணிப்பூர், மேகாலயா போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து … Read more

இந்திய வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்த நிலநடுக்கம்..! அச்சத்தில் மக்கள்..!

இன்று இந்திய வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 1.06 மணிக்கு மணிப்பூர் மொய்ராங் பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அசாமின் தேஜ்பூர் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாலை 2.04 மணிக்கு நிகழ்ந்துள்ளது. பின்னர் அதிகாலை 4.20 மணியளவில் மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு … Read more

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்..!

ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவில் இன்று மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவில் வடக்கு மாலுகு பகுதியில் உள்ள டைடோர் கெபுலாவனில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) மதியம் 3.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பான் நாட்டில் ஹோன்சு நகரில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடலோரப்பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், ஜப்பானின் தகஹாகி … Read more