அசாமில் இன்று பிற்பகல் நிலநடுக்கம்..!

இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் அசாம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மேற்கு அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உணரப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.