இந்தோனோசியாவில் நிலநடுக்கம்…தொடர் பீதியில் மக்கள்…!!

இந்தோனோசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சும்பவா தீவில் இன்று தீடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கே இருந்த கட்டிடங்கள் அதிர்ந்தன.இதையடுத்து மக்கள் பீதியடைந்து கட்டிடத்தை விட்டு பாதுகாப்பு கருதி வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.அதே போல நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி_யால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

சிலி நாட்டில் கடுமையான நிலநடுக்கம்!!

தென் அமெரிக்காவில் உள்ள  சிலி நாட்டில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிலி தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும்.சிலி நாட்டில் உள்ள  யோகியும்போ நகரில் கடற்கரை பகுதிகளில்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட  சேதங்கள் குறித்து தகவல்  ஏதுவும் வரவில்லை.இந்த நிலநடுக்கத்தை ஒட்டி சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.

பிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம்…!!

பிலிப்பைன்சின் மிண்டியானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டியானோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3ஆக பதிவான நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. பூமிக்கடியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.நிலநடுக்கத்தை தொடர்ந்து பசுபிக் கடற்பகுதியில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை … Read more

இத்தாலி சிசிலி தீவில் திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி…!!

இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் தீடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மவுண்ட் எட்னா என்ற எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஐரோப்பா நாட்டின் மிகப்பெரிய எரிமலை என்று அழைக்கப்படும் மவுண்ட் எட்னா என்ற எரிமலை இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ளது.இந்நிலையில் இந்த தீவில் ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவிலானா லேசான தீடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் தற்போது எட்னா என்ற எரிமலையானது வெடிக்கத் தொடங்கியுள்ளது. எரிமலை வெடிப்பினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் காட்சியளிக்கின்றது. எட்னா எரிமலை வெடிப்பை அடுத்து சிசிலி தீவில் … Read more

இந்தோனேஷியால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ..!நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ..!

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவு கோளிலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்தோனேசியாவில் பளு என்ற மத்திய சுலவேசி  தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீட்படையினரையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

டோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்..!

பசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நியாபு நகரில் இருந்து 470 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவ … Read more

நெல்லை மற்றும் கேரள மாநிலத்தில் லேசான நில அதிர்வு…!

நெல்லை மாவட்டம் பம்பொழி, வடகரை, அச்சன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.அதேபோல் கேரள மாநிலம் ஆரியங்காவு, தென்மலை, புனலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று பிதியடைந்துள்ளனர்.

ஈரானில் நிலநடுக்கம். 5.2 ரிக்டராக ஆக பதிவானது

ஈரான் நாட்டில் தலைநகர் அருகில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு மீட்பு குழுவினர் விரைந்துசென்று பாதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கே மெஷ்கிண்டாஷ்ட் நகரில் ஏற்பட்டது. இது குறித்து, பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்நிலநடுக்கம் தெஹ்ரான் மட்டுமில்லாமல், ஈரானின் வடக்கே பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். source: dinasuvadu.com

அசாமில் லேசான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தில் உள்ள தேமாஜி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு கிலமோரா பகுதியிலிருந்து சுமார் 39 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டதால் பொருள் சேதம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.