உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்வு.! 1100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..தொடர்கிறது சோகம்.!

துருக்கி நாட்டில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாதிப்பினால், 18 பேர் பலியாகியும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், என்று தகவல் தெரிவிக்கப்பட்டது மேலும், நிலடுக்கத்தால் எலாஸிக்கில் 18 பேரும், மலட்யாவில் 4 பேரும் உயிரிழந்தனர். மொத்தம் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்து, காயமடைந்த எண்ணிக்கை 1100-க்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. துருக்கி நாட்டில் கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 … Read more

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்.! 18 பேர் பலி..500க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

துருக்கியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவால் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நிலநடுக்க பாதிப்பினால், 18 பேர் பலியாகியும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி நாட்டில் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட இந்த நிலநடுக்கம், … Read more

அச்சத்தில் மக்கள்.! ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு.!

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. ஆனால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், இதுகுறித்து அரசு ஊடகம் கூறுகையில், ஈரானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கன் எல்லையோரத்தில் சன்கன் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 8 கிலோ மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈரான் … Read more

2 மணிநேரத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் .!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 மணிநேரத்திற்குள் நேற்று இரவு அடுத்தடுத்து 4 நான்கு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.  இந்நிலநடுக்கங்கள் முறையே 36 மற்றும் 63 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 மணிநேரத்திற்குள்  நேற்றிரவு அடுத்தடுத்து 4 நான்கு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.  இரவு 10.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆகவும் , பின்னர் 6 நிமிடங்கள் கழித்து ரிக்டர் அளவில் 5.5 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் மக்கள் … Read more

#BREAKING :டெல்லியில் நில அதிர்வு.!

தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில்  ஹிந்துகுஷ் பகுதியில் மையமாக கொண்டு  நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.8 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.    

நேபாளத்தில் இன்று திடீர் நிலநடுக்கம்..!

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள டைலேக் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று இரவு 7.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு  நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.நில நடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்பட்டதாக தற்போது வரை இந்த வித தகவலும் வரவில்லை.

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ! மக்கள் பீதி

பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. சாலைகள் துண்டிப்பு, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டுவெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கம் இந்தியாவில் உள்ள வடமாநிலங்களிலும் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் போது மேசைக்கு அடியில் சென்ற பெண் தொகுப்பாளர்!

அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஸ்சல்ஸில்  இருந்து சான் டியாகோ வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் ,சாலைகள் சேதம் அடைந்தனர்.மேலும் தரை வழியாக கொண்டு செல்லப்பட்ட சமையல் ஏரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு வீடுகள்  தீப்பிடித்தது.இந்நிலையில் லாஸ் ஏஸ்சல்ஸில் நகரில்  உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் செய்தியை வசித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தினால் நேரலையில் செய்தி  வசித்து … Read more

தொடரும் இயற்கை பேரிடர்கள்! நேபாளத்தில் நிலநடுக்கம்

இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, நேபாளத்திலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் காத்மாண்டுவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு, நில அதிர்வினால், குடியிருப்புகள் லேசாக அசைந்துள்ளது. இதனையடுத்து குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் நிலநடுக்கம்…ரிக்டர் அளவு கோளில் 4.2ஆக பதிவு…!!

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.2ஆக பதிவாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நில அதிர்வின் அதிர்ச்சியை மக்கள் உணர்ந்தது சொல்லப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தின் சேதாரம் குறித்த விவரம் முளுமையாக வெளிவரவில்லை. மக்கள் யாரும் பயப்பட வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.2ஆக பதிவாகியுள்ளது . நிலநடுக்கத்தின் எதிரொலியால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளானார்.