2 மணிநேரத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் .!

2 மணிநேரத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் .!

  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 மணிநேரத்திற்குள் நேற்று இரவு அடுத்தடுத்து 4 நான்கு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 
  • இந்நிலநடுக்கங்கள் முறையே 36 மற்றும் 63 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 மணிநேரத்திற்குள்  நேற்றிரவு அடுத்தடுத்து 4 நான்கு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.  இரவு 10.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆகவும் , பின்னர் 6 நிமிடங்கள் கழித்து ரிக்டர் அளவில் 5.5 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் மக்கள் பீதியடைந்து விதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதனை அடுத்து இரவு 10.58 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், இரவு 11.20 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து  நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்நிலநடுக்கங்கள் முறையே 36 மற்றும் 63 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன.இந்த நிலநடுக்கம் காரணமாக பொருட்சேதம் அல்லது உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

author avatar
murugan
Join our channel google news Youtube