தெலங்கானாவை தமிழகம் பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின்.!

தெலங்கானா அரசு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு நடத்துவது சரியா..? என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர். இன்று வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? என கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து,பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தமிழக அரசு … Read more

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த ஸ்டாலின்!

கொரோனா தோற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் நேற்றைய முன்தினம் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் … Read more

ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை நேற்று காலையில்  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய … Read more

நாளை திமுகவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

நாளை காலை 10 மணிக்கு திமுகவினருடன் காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலர்கள் கூட்டம்  காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவது குறித்தும், காவல்துறை கைது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர். பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் … Read more

4 நாட்கள் முழு ஊரடங்கு .! முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது .!

சென்னை ,மதுரை , கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,885 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள  முதல்கட்ட நடவடிக்கையாக  மத்திய அரசு அறிவித்த  40 நாள் ஊரடங்கை மதித்து, பொதுமக்கள் … Read more

"அம்மா உணவகத்தில் அரசியல் செய்யாதீர்கள் " – மு.க.ஸ்டாலின்.!

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தியாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது … Read more

BREAKING:இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க ஸ்டாலின் கோரிக்கை.!

கொரோனாவால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் , நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இன்று காலை 10 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை … Read more

எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.1கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது – மு.க.ஸ்டாலின் கடிதம் .!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி முடிவெடுக்க இன்று மாலை முதலமைச்சர் … Read more

+1.,+2க்கு.,பொதுத்தேர்வு தேவையா!??விபரீத விளையாட்டு..பாதுகாப்பில் அதிமுக அரசு அலட்சியம்-விமர்சனம்

மாணவர்களின் பாதுகாப்போடு விபரீத விளையாட்டு நடத்தாமல், 11 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பிற்கும் மார்ச்.,31 வரை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 10வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பள்ளிகளில்  11, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தபடி … Read more

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு..! தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மனு மீதான விசாரணையை வருகின்ற  23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.