ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை நேற்று காலையில்  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய போது ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து,  நாளை (அதாவது இன்று) திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும்  மாவட்ட செயலர்கள் கூட்டம்  காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது என ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது தலைமையில் நாளை(இன்று) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள கூட்டத்தில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவது குறித்தும், காவல்துறை கைது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube