திண்டுக்கல் அருகே கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு டூவீலரில் செல்ல தடை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .இதனால் மோதல்கள் அதிகமாக உள்ளது .எனவே கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி டூவீலர்களில் செல்ல வனத்துறை தடை  விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலாகிறது. சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய இடங்கள் வனப் பகுதியில் உள்ளன.  இப்பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடங்களை கண்டு ரசிக்க இதுவரையில் இரு … Read more

திண்டுக்கல் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து! 6பேர் பலி ….

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுபேருந்தும் ,தனியார் பேருந்தும் நேருக்கு நேர்  மோதி விபத்து.விபத்தில் ஆறு பேர் பலி . 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி திண்டுக்கல் மாவட்டம் பலக்கனுத்து என்ற இடத்தில் பேருந்து விபத்து நடைபெற்றுள்ளது.காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். source: dinasuvadu.com

வரும் 31ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது;வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 31ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது அரசு சார்பாக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின்போது சுமார் 25,500 பயனாளிகளுக்கு 24 அரசு துறை மூலம் 640 கோடி நலத்திட உதவிகள் வழங்கப்படவுள்ளது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

போலி கைடுகளுக்கு இனி சிறை தண்டனை : பழனியில் காவல்துறை எச்சரிக்கை

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணபடுகிறது. இங்கு வரும் வெளியூர் பக்தர்களை சிலர் தாங்கள் கைடு என கூறிக்கொண்டு பழனியை சுற்றிகாட்டுவதாகவும், சாமி தரிசனம் சீக்கிரம் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி பணம் பறித்து ஏமாற்றி விடுகின்றனர். ஆதலால், அவ்வாறான செயல்களை தடுக்கும் விதமாகவும், அவ்வாறு செய்பவர்களை பிடிக்கும் வகையில் காவல்துறை ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அவ்வாறு ஏமாற்றுபவர்களுக்கு கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என கூறினார். source :dinasuvadu.com

நேற்று கிறிஸ்துமஸ் விழாவின் பொது அந்தோனியார் சிலை உடைப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைத்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட பரபரப்பால் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

திண்டுக்கலில் செளராஷ்டிரா மக்கள் கைத்தறிநெசவு தொழிலில் கூலி குறைவாக தருவதை கண்டித்து போராட்டம்..!

திண்டுக்கல் நாகல்நகர் செளராஷ்டிரா மக்கள் கைத்தறிநெசவு தொழிலில் கூலி குறைவாக தருவதை கண்டித்து நாகல்நகர் வரதராஜபெருமாள் கோவில் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் 1000க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.