கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் இன்று 1.1 ° C வெப்பநிலை பதிவு.!

டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக  1.1 ° C ஆக பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத வெப்பநிலையாகும். மேலும், மிகவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக இன்று காலை 6 மணியளவில் 0 தெரிவுநிலையுடனும், காலை 7 மணிக்குப் பிறகு, தெரிவுநிலை சுமார் 150 மீட்டராக காணப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7.1 டிகிரி செல்சியஸ், கடந்த ஆண்டு டிசம்பரில் தலைநகரில் பதிவான   குறைந்தபட்ச வெப்பநிலையாகும். இந்நிலையில், டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் ஜனவரி … Read more

சற்று நேரத்தில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை., தீர்வு கிடைக்குமா விவசாயிகளுக்கு.?

இன்று மீண்டும் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. புதிய மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் குறைந்த பட்ச ஆதார விலையை சட்டரீதியாக உறுதிபடுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தி, கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு 5 கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்விலேயே முடிவடைந்தது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் … Read more

குடி வயதை 25 லிருந்து 21 ஆக குறைக்க டெல்லி குழு பரிந்துரை.!

டெல்லி அரசாங்கம் அமைத்த ஒரு குழு, டெல்லியில் சட்டபூர்வமான குடி வயதைக் குறைக்க பரிந்துரைத்துள்ளது. பரிந்துரையின்படி, இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது தற்போதைய 25 ல் இருந்து விரைவில் 21 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த குழு செப்டம்பர் மாதம் கலால் ஆணையரின் தலைமையில் நகர அரசாங்கத்தை அமைத்தது. அதன்படி, மதுபான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறைகளை எளிதாக்குவது, கலால் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளை சரிபார்ப்பது குறித்து … Read more

வாஜ் பாய் நினைவாக பெயர் சூட்டப்பட்ட டெல்லியின் பூங்கா மற்றும் பொதுவளாகம்!

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த நாளையொட்டி நேற்று டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்மஸ் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வந்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் அவருக்கு அஞ்சலி … Read more

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.., புதிய கேன்டீனை திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்.!

ஆதரவற்ற மக்கள் ஒருநாளில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது – கவுதம் காம்பீர் முன்னாள் இந்திய அணி வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக வெற்றி பெற்றுள்ள கவுதம் காம்பீர், தனது தொகுதிக்குட்பட்ட காந்திநகர் மார்க்கெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாயில் சாப்பிடும் வகையில் புதிய கேன்டீனை திறந்து வைத்துள்ளார். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான, சத்தான உணவு … Read more

டெல்லியில் தொடர்ச்சியாக 3 வது நாளாக 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு.!

தேசிய தலைநகரான டெல்லியில் இன்று குளிர் மற்றும் பனிமூட்டமான வானிலை நீடித்தது எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஐந்து டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இன்று பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.  

உண்மையான ஹீரோக்கள் யார் என உலகம் புரிந்து கொண்டது – ராஜ்நாத் சிங்!

இந்த கொரோனா நெருக்கடிக்கு பின்பு உண்மையான ஹீரோ யார் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார். கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொளி வழியே கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் பேசும்பொழுது, தற்போது புதிய கொரானா வைரஸை பற்றி பிரிட்டனில் கேள்விப்பட்டிருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை, இது தீவிரமான ஒன்றுதான். உலகத்தில் ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்துக் … Read more

டெல்லி கொரோனாவின் மூன்றாம் அலையை வென்றுவிட்டது – டெல்லி முதல்வர்!

மக்களின் முயற்சியாலும், ஒத்துழைப்பாலும் டெல்லி கொரோனாவின் மூன்றாம் அலையை வென்றுவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் குறைந்து கொண்டே தான் வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக மக்கள் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் பரவ ஆரம்பித்தது. இது ஆட்டின் மூன்றாவது கொரோனா அலையாக இருக்கலாம் எனவும், மக்கள் அச்சப்பட … Read more

#BIGBREAKING: டெல்லியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம்..!

டெல்லியின் சில பகுதிகளில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பயந்து வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு குறித்து அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த  நிலநடுக்கத்தின் தாக்கம் நொய்டாவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி டி.ஜி.பி. டெல்லிக்கு இடமாற்றம் – மத்திய உள்துறை அமைச்சகம்

புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா டெல்லிக்கு இடமாற்றம் செய்து, அவருக்கு பதிலாக புதுச்சேரி டி.ஜி.பி.யாக ரன்வீர் சிங் கிருஷ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில காவல்துறையில் டிஜிபியாக சுந்தரி நந்தா பணியாற்றி வந்தார். 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பெண் அதிகாரியான சுந்தரி நந்தா, புதுச்சேரி மாநிலத்தின் நியமிக்கப்பட்ட முதல் டி.ஜி.பி பெண் அதிகாரி ஆவார். டெல்லியில் பணியாற்றிய அவர், புதுச்சேரிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, திடீரென சுந்தரி … Read more