வாஜ் பாய் நினைவாக பெயர் சூட்டப்பட்ட டெல்லியின் பூங்கா மற்றும் பொதுவளாகம்!

வாஜ் பாய் நினைவாக பெயர் சூட்டப்பட்ட டெல்லியின் பூங்கா மற்றும் பொதுவளாகம்!

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த நாளையொட்டி நேற்று டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நேற்று கிறிஸ்மஸ் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வந்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். மேலும் நாடு முழுவதும் வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அஞ்சலி செலுத்துவதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது நினைவாக வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள டில்லியின் மேயர் ஜெயப்பிரகாஷ் அவர்கள், ரோஜினியில் செக்டர் -17 இல் உள்ள பூங்காவிற்கு வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் அவரது நினைவாக பாசிங் விகாரில் உள்ள ஒரு பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube