டெல்லி, ஐதராபாத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு!

டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹைதராபாத்திற்கு தெற்கே 156 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக என்.சி.எஸ் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் … Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி செல்கிறார்.அதன்படி,நாளை காலை 10 மணிக்கு மேல் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது,தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் அவர் முறையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும்,அண்மையில் … Read more

உளவு பார்க்கும் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் விவாதப் பொருளாகி மாறியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு தரப்பில் … Read more

இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!-ஹரியானா சிறுவன் பலி..!

இந்தியாவில் பறவை காய்ச்சலுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. ஹரியானாவை சேர்ந்துள்ள சிறுவன் ஒருவன் பறவை காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைகளை ஏவியன் இன்புளூயன்சா என்ற வைரஸ் தாக்கி பறவைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இந்த காய்ச்சலை பறவை காய்ச்சல் என்றழைக்கிறோம். இது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவும். இந்த வைரஸ் எச்5என்8 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்கப்பட்ட … Read more

பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை -முதல்வர் ..!

தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த குடியரசுத் தலைவரை அழைத்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரைச் சந்தித்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த குடியரசுத் தலைவரை அழைத்தேன். சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தேன். மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். … Read more

டெல்லியில் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்த்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த திட்டமிட்டு இருந்தாக கூறப்பட்டது. இதன் காரணமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு … Read more

எல்லையில் தொந்தரவு: அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

எல்லையில் தொந்தரவு செய்பவர்களுக்கு அவர்களுடைய பாணியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் எல்லை பாதுகாப்புப் படையின் 18-வது பதக்கம் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீர மரண அடைந்தவர்களுக்கு, துணிச்சலுடன் பணி புரிந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதன்பின் இந்த விழாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர்ந்த தியாகம் செய்தவர்களுக்கு நான் வீரவணக்கம் … Read more

கர்நாடக முதலமைச்சர் பதவி ராஜினாமா? – எடியூரப்பா விளக்கம்!!

கர்நாடகா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, எடியூரப்பா விளக்கம். கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை தொடர்பாக இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இதன்பின் டெல்லியில் உள்ள கர்நாடக இல்லத்தில் முதல்வர் எடுயூரப்பா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, கர்நாடக மாநிலத்தில் முதல்வர் விரைவில் மாற்றப்படுவார் என தொடர்ந்து தகவல்கள் … Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீர் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீர் சந்திப்பு! டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் திடீர் சந்தித்து ஆலோசித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பதவிக்கு சரத் பவாரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட சரத் பவாருக்கு திட்டம் இல்லை என தேசியவாத காங்கிரஸும் மறுத்திருந்த நிலையில், தற்போது பிரதமருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் … Read more

பிரதமருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு..!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு. மேகதாது அணைக்கு உடனே அனுமதி தரவேண்டும் என பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகதாது விவகாரம் பற்றி மத்திய அமைச்சரிடம் தமிழக அனைத்து கட்சி குழு முறையிட்ட நிலையில் பிரதமர் மோடியுடன் எடியூரப்பா சந்தித்துள்ளார்.