பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் குண்டு வெடிப்பு…! 7 பேர் பலி..! 50-க்கு மேற்பட்டோர் காயம்…!

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், வணிக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து, டாக்கா பெருநகர காவல்துறை கமிஷினர் ஷபிகுல் இஸ்லாம் கூறுகையில், இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் … Read more

புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சிறப்பு காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி…!

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமது மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில், அவந்திபோரா பகுதியில் உள்ள ஹரிபரிகாமில் உள்ள சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமதின் வீட்டிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் பயங்கரவாதிகள் நுழைந்து, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஃபயாஸ் அஹமது, அவரது மனைவி ராஜ பேகம் மற்றும் அவரது மகள் … Read more

சீன பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து – 18 பேர் உயிரிழப்பு!

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் ஜீசெங் கவுண்டி எனும் பகுதியில் தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கக்கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று காலை தற்காப்பு கலை பயிற்சிக்காக 34 மாணவ மாணவிகள் வந்துள்ள நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கிருந்த … Read more

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 17 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

கென்யாவில் 23 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில் வழக்கமான பயிற்சிக்காக ஹெலிகாப்டர் ஒன்று தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 23 ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் நைரோபியில் புறநகர் பகுதியில் காலை 8 மணி அளவில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து … Read more

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் இன்று!

இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் வரலாற்றில் இன்று. 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் மற்றும் கேதரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தவர் தான் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். இரும்பு தொழிற்சாலையில் கிரேன் இயக்குனராக இருந்த இவரது தந்தை ஜோசப் ஒரு இசைக் கலைஞனாக இருந்துள்ளார். இந்நிலையில் காலப்போக்கில் … Read more

காவலர் தாக்கியதால் உயிரிழந்த வியாபாரி – தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பதில்!

காவலர் தாக்கியதால் உயிரிழந்த சேலம் வியாபாரி குறித்து பேரவையில் பேசிய முதல்வர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.  சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

#Breaking:சேலம் வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான எஸ்.ஐ.பெரியசாமி சஸ்பெண்ட்

சேலம் வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான எஸ்.ஐ.பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி,மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,கொரோனா பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். … Read more

காவலர் தாக்கியதால் உயிரிழந்த குடிமகன் – காவலர் கைது!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தி சேர்ந்த குடிமகன்கள் தர்மபுரிக்கு சென்று தங்களுக்கு தேவையான சாராயங்களை வாங்கி வந்து அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை … Read more

100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தும் வரதட்சணைக் கொடுமையால் கொலை செய்யப்பட்ட கேரளா பெண்!

கேரளாவை சேர்ந்த விஸ்மயா எனும் பெண்ணுக்கு 100 பவுன் நகை, டொயோட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் ஆகியவை வரதட்சனை கொடுத்தும் வரதட்சனை கொடுமையால் தற்பொழுது அவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா எனும் பெண்மணி இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்துள்ளார். இந்நிலையில் விஸ்மயாவுக்கு கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் … Read more

தஞ்சையில் உயிரிழந்த மோப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு…!

தஞ்சையில் குற்றங்களை துப்பறிவதில்,காவல்துறையினருக்கு மிகவும் உறுதுணையாக இருந்த மோப்ப நாய் உயிரிழந்ததையடுத்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறையினரின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் குற்றங்களை துப்பறிவதில்,காவல்துறையினருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்த ராஜராஜன் என்ற மோப்ப நாய் உயிரிழந்துள்ளது. இந்த மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்த மோப்ப நாய் தஞ்சையில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனையடுத்து,ராஜராஜனின் உடல் துப்பறிவு பிரிவு அலுவகத்தில் வைக்கப்பட்டது. அதற்கு காவல்துறையினர் மாலை … Read more