தோனியை புகழ்ந்த ரஹானே ..! மும்பை போட்டிக்கு முன் அவர் பேசியது என்ன ..?

Ajinkya Rahane About MSDhoni[file image]

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன அஜிங்க்யா ரஹானே தற்போது சிஎஸ்கே நிர்வாகம் யூடூபில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்.எஸ்.தோனியை புகழ்ந்து பேசி இருக்கிறார். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்து வருகிறது. மேலும், வருகிற ஏப்ரல்-14 ம் தேதி அன்று … Read more

மோசடி வழக்கில் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கைது..!!

MSDhoni [file image]

MSDhoni : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஆன எம்.எஸ்.தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கடந்த செவ்வாய்கிழமை அன்று மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இந்திய அணியில் வெற்றி நடைப்போட்டு சிறப்பான கேப்டனாக செயலாற்றியவர் தான் எம்.எஸ்.தோனி. இவரது கேப்டன்சியில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகள் கிடையாது என்பது நமக்கு தெரியும். சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் … Read more

‘அவர் மீண்டும் வரும் போது பணிச்சுமையை கண்காணிப்போம்’ ! மயாங்க் யாதவ்க்கு அப்படி என்ன ஆச்சு ?

Mayank Yadav [file image]

ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் மயாங்க் யாதவின் காயம் குறித்தும் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை குறித்தும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வினோத் பிஸ்ட் விளக்கி கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் கலக்கி கொண்டு வரும் இளம் வேக பந்து வீச்சாளர் தான் மயாங்க் யாதவ். இவர் வீசும் 150 – 156 கி.மீ வேகத்திற்கு எதிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனாளும் ஈடு கொடுத்து நிற்க முடியாமல் தடுமாறினார்கள். லக்னோ அணி விளையாடிய … Read more

இங்கு காதுகள் செவிடாகும்… தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் கூறியது என்ன?

Shreyas Iyer

ஐபிஎல்2024: சேப்பாக்கத்தில் ரன்களை எடுப்பது எளிதான விஷயமாக இல்லை என்று தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும், புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு எதிரான தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் … Read more

‘நல்ல பந்து வீசினால் அது உங்களுக்கு உதவும்..’ ! வெற்றியின் ரகசியத்தை உடைத்த ஜடேஜா ..!

Jadeja [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா பேசி இருந்தார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காக ஜடேஜா தனது பந்து வீச்சின் மூலம் கொடுத்திருந்தார். இதனால் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அவர் … Read more

இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜிக் தான்… சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் ஓபன் டாக்!

Ruturaj Gaikwad

ஐபிஎல்2024: எனது முதல் அரைசதம் அடிக்கும்போது எம்எஸ் தோனி கூட இருந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணியை சென்னை அணி தனது ஹோம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் … Read more

ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..!

CSKvKKR

ஐபிஎல் 2024 : சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து  141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில்  சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா, … Read more

ஐபிஎல் 2024: பந்து வீச்சில் மிரட்டிய சென்னை… 137 ரன்களுக்கு சரிந்த கொல்கத்தா..!

CSKvKKR

ஐபிஎல் 2024 : முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  சென்னையும், கொல்கத்தாவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலே பிலிப் சால்ட் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்சை … Read more

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் கொல்கத்தா ..! புயலை சமாளிக்குமா சென்னை ?

CSKvsKKR [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக இன்று சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணியாக கொல்கத்தா அணி இருந்து வருகிறது. இந்த போட்டியில் … Read more

டீம்ல இதை செஞ்சா இன்னைக்கு சிஎஸ்கே வெற்றி கன்ஃபார்ம்! சபாஷ் சரியான கணிப்பு!

CSK Fan Theory[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில்  2 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை அணி இன்று நடைபெறும் கொல்கத்தா அணியுடனான போட்டியில் வெற்றி பெற இந்த அணியில் இதை செய்தால் போதுமானது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் அணியை சந்தித்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பவுலர்களான முஸ்தபிஸுர் ரஹ்மானும், மதிஷா பத்திரானவும் அணியில் இடம் பெறாமல் போனதே அந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் … Read more