CSKvsMI : டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வான்கடே  மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, … Read more

இது தான் நிஜ ஐபிஎல்! மும்பை கோட்டையில் கொடியை பறக்கவிடுமா சென்னை?

csk vs mi 2024

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியை தான் எல்லா அணி ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு சென்னை … Read more

மும்பைனு வந்துட்டாலே ‘தல’ வேற லெவல் ..! ஏன் தெரியுமா ?

MSDhoni vs MI [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கபடும் போட்டிகளில் ஒன்று தான் மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டி. அதில் சென்னை அணியின் தோனி, மும்பை அணிக்கு எதிராக செய்த சில சம்பவங்ககளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் எல்-க்ளாசிக்கோ (EL-Classico) என்றால் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இந்த இரு அணிகளுக்கும் போட்டி என்றாலே அது ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இருக்கும் என்பது … Read more

மோசடி வழக்கில் தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கைது..!!

MSDhoni [file image]

MSDhoni : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஆன எம்.எஸ்.தோனியின் முன்னாள் தொழில் பங்குதாரர் கடந்த செவ்வாய்கிழமை அன்று மோசடி வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இந்திய அணியில் வெற்றி நடைப்போட்டு சிறப்பான கேப்டனாக செயலாற்றியவர் தான் எம்.எஸ்.தோனி. இவரது கேப்டன்சியில் இந்திய அணி வெல்லாத ஐசிசி கோப்பைகள் கிடையாது என்பது நமக்கு தெரியும். சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்நிலையில் … Read more

சேப்பாக்கம் என்றாலே சாபம் தான் ! தோல்வியை தொடரும் ஆர்சிபி!

csk vs rcb

CskvsRCB 17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.முதல் போட்டி என்பதால் இந்த போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் … Read more

CSKvsRCB : துபே – ஜடேஜா கூட்டணியில் சிஎஸ்கே வெற்றி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ..!

Csk won [file image]

CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரில் சென்னை, பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஃபாப் டுப்ளஸி சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார் சென்னை அணியின் தீபக் சஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவின் பந்து வீச்சை பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அதை தொடர்ந்து, சரியான சமயத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி டுப்ளஸி விக்கெட்டை எடுத்து அசத்தினார். … Read more

CSKvsRCB : அனுஜ் ராவத் அசத்தல் ..! சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு ..!

CSKvsRCB 1st Innings[ file image]

CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில், சிஎஸ்கே அணியும் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்காளாக விராட் கோலியும், ஃபாப் டுப்ளஸியும் களமிறங்கினர். ஃபாப் டுப்ளஸி ஆட்டம் தொடங்கியது முதல் சென்னை அணியின் தீபக் சஹர் பந்து வீச்சை பவுண்டரிகள் அடித்து பறக்க விட்டார். ஃபாப் டுப்ளஸியின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகையில் சென்னை அணியின் இடது கை பந்து வீச்சாளரான … Read more

CSKvsRCB : தொடங்கியது முதல் போட்டி ..! பேட்டிங் களமிறங்கும் பெங்களூரு ..!

IPL CskvsRcb Toss [ file image]

CSKvsRCB : ஐபிஎல் 2024, 17-வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால். இந்த முடிவை டாஸ் வென்றவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் ஆன ஃபாப் டுப்ளஸி எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 31 … Read more

IPL 2024 : தொடங்கியது ஐபிஎல் திருவிழா ..! கொண்டாட்டத்தில் மூழ்கிய சேப்பாக்கம் ..!

IPL Ceremony [file image]

IPL 2024 : உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் தொடர் தான் ஐபிஎல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  50-வது முறையாக கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து, 2023 இறுதி போட்டி முடிவடைந்ததில் இருந்து இந்த 2024 ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை அத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது. Read More :- ‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..! தற்போது … Read more

CSKvRCB : கோலி, மேக்ஸ்வெல், ருதுராஜை திணறடிக்கும் பந்துவீச்சாளர்கள்…

Virat kohli - Ruturaj Gaikwat - Maxwell

CSKvRCB : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஆட்டம் இன்று இரவு எட்டு மணி அளவில் தொடங்க உள்ளது. முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியில் மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த முறை நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் … Read more