ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..!

ஐபிஎல் 2024 : சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து  141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில்  சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா, தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளையும்,  முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும்,  மகேஷ் தீக்ஷனா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 , சுனில் நரைன் 27,  ஆங்கிரிஷ் ரகுவன்ஷி 24 ரன்களும் எடுத்தனர்.

138 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திர, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியதும் ரச்சின் ரவீந்திர வந்த வேகத்தில் 8 பந்தில் 3 பவுண்டரி அடித்து 15 ரன் எடுத்து வருண் சக்கரவர்த்தியிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார்.

பின்னர்  டேரில் மிட்செல், ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். இதில் கேப்டன் ருதுராஜ் 45 பந்தில் அரைசதம் அடித்தார். மறுபுறம் இருந்த டேரில் மிட்செல் 25 ரன்கள் எடுத்து இருந்தபோது சுனில் நரைன் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

வழக்கம்போல சிவம் துபே 18 பந்தில் 3 சிக்ஸர் 1 பவுண்டரி என மொத்தம் 28 ரன்கள் எடுத்தார். இருப்பினும் கேப்டன் ருதுராஜ் 58 பந்தில் 67* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து  141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா  2 விக்கெட்டையும், சுனில் நரைன் 1 விக்கெட்டையும்  பறித்தனர்.

சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றும், 2 போட்டியின் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

 

author avatar
murugan