சென்னை கோட்டையை யாராலும் உடைக்க முடியல! ஆகாஷ் சோப்ரா அதிரடி ஸ்பீச்!!

chennai super kings aakash chopra

ஐபிஎல் 2024 : சென்னை கோட்டையை யாராலும் உடைக்க முடியவில்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட தோற்காமல் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று இருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் ஐந்து போட்டிகள் சென்னை விளையாடி இருக்கும் நிலையில், சென்னையை தவிர மற்ற இடங்களில் நடைபெற்ற போட்டியில் மட்டும் தான் தோல்வி அடைந்து இருக்கிறது. சென்னையில் அசைக்க முடியாத பார்மில் இருக்கும் சென்னை … Read more

அந்த சத்தம்! தோனி என்ட்ரி பார்த்து அதிர்ந்து போன ஆண்ட்ரே ரஸ்ஸல்!

MSDhoni

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் கொடுத்த சவுண்டை பார்த்து ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிர்ந்துபோனார். நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை … Read more

இங்கு காதுகள் செவிடாகும்… தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் கூறியது என்ன?

Shreyas Iyer

ஐபிஎல்2024: சேப்பாக்கத்தில் ரன்களை எடுப்பது எளிதான விஷயமாக இல்லை என்று தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். நடப்பு சீசனில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை குவித்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இருப்பினும், புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு எதிரான தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் … Read more

இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜிக் தான்… சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் ஓபன் டாக்!

Ruturaj Gaikwad

ஐபிஎல்2024: எனது முதல் அரைசதம் அடிக்கும்போது எம்எஸ் தோனி கூட இருந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணியை சென்னை அணி தனது ஹோம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் … Read more

ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..!

CSKvKKR

ஐபிஎல் 2024 : சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து  141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில்  சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா, … Read more

ஐபிஎல் 2024: பந்து வீச்சில் மிரட்டிய சென்னை… 137 ரன்களுக்கு சரிந்த கொல்கத்தா..!

CSKvKKR

ஐபிஎல் 2024 : முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  சென்னையும், கொல்கத்தாவும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலே பிலிப் சால்ட் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்சை … Read more

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் கொல்கத்தா ..! புயலை சமாளிக்குமா சென்னை ?

CSKvsKKR [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக இன்று சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணியாக கொல்கத்தா அணி இருந்து வருகிறது. இந்த போட்டியில் … Read more

KKR தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைக்குமா சென்னை ? சேப்பாக்கில் இன்று பலப்பரீட்சை ..!

CSKvsKKR Preview [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும் கொல்கத்தா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. தொடர் தோல்வியிலிருந்து வரும் சென்னை அணி தற்போது இந்த போட்டியில் வெற்றி பெறுவார்களா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த தொடரில் இது வரை விளையாடிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி அபாரமாக … Read more

#IPL2022: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பிராவோ.. முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா!

15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தோனி 50 ரன்களும், உத்தப்பா 28 ரன்களும், ஜடேஜா 26 … Read more

#IPL2022: கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் போட்டி – டாஸ் வென்ற கொல்கத்தா அணி!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் முறையாக இரு அணிகளும் புதிய கேப்டன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சென்னை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை வான்கனடே மைதானத்தில் … Read more