உலகளவில் கொரோனாவால் இந்த வயதினர் தான் அதிகம் உயிரிழப்பு…?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் சீனாவை மிரட்டியது. தற்போது கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவி உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸுக்கு  மருந்து கண்டுபிடிக்காததால் மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல   நடவடிக்கை  மேற்கொண்டு  வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் , உயிரிழந்தவர்களின் … Read more

திட்டமிட்டப்படி அதிபர் தேர்தல் நடைபெறும்- ட்ரம்ப் அறிவிப்பு

திட்டமிட்டப்படி அதிபர் தேர்தல் நடைபெறும்என்று  ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உலக வல்லரசு நாடு என கூறப்படும் அமெரிக்கா தற்போது மிகுந்த பாதிப்புள்ளாகி வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில்,அதிபர் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இந்நிலையில் திட்டமிட்டப்படி நவம்பர் மாதத்தில்  அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று  ட்ரம்ப் திட்டவட்டமாக … Read more

அமேசான் காட்டில் வசிக்கும் பெண்ணுக்கு கொரோனா உறுதி

முதல் முறையாக அமேசான் காட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவால் 50000 -க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.  அமேசான் காட்டில் உள்ள மக்கள் வெளி உலகிற்கு  அதிகம் தொடர்பு  இல்லாதவர்கள்.அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை அவர்களே  பூர்த்தி செய்து  வருகின்றனர். இந்நிலையில் பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் பழங்குடியின  பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பிய … Read more

பணியாளர்கள்‌‌ 3‌2000 பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்! என்ன காரணம்?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது பணியாளர்கள்‌‌ 3‌2000 பேரை தற்காலிகமாக இடைநீக்கம்‌ செய்துள்ளது.  கொரோனா வை‌ரஸ்‌  காரனமாக உலகில் உள்ள பல நாடுகள்‌ சர்வதே‌ச விமா‌ன சேவையை ரத்து செய்து உள்ளது .இதன் விளைவாக  பன்னாட்டு‌ விமான நிறுவனங்கள்‌ கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது .நெருக்கடியில் சிக்கிய ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் .இந்த நிறுவனம் தற்காலிகமாக ஊழியர்களை‌ குறைக்கும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக‌ பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் … Read more

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ரஷ்யாவிடம் இருந்து உபகரணங்கள் வாங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க!

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை  ரஷ்யாவிடம் இருந்து வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் கஷ்டமான சூழ்நிலையிகளில் ஒருவொருக்கொருவர் உதவி செய்த்துள்ளன. … Read more

இந்தியா , சீனாவை தவிர மற்ற நாடுகள் பொருளாதார மந்தநிலைக்குச் செல்லும் ஐ.நா கணிப்பு .!

உலக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,092 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,89,240 ஐ எட்டியுள்ளது. கொரோனா  வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது.இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதன் காரணமாக மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த … Read more

கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்.!

சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. தற்பொழுது உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்ததுக்கொண்டே வருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 6,68,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30,890 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 53 மருத்துவர்களும் அடங்குவர். மேலும், 92,472 பேர் பாதிக்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்- ஐசிசி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக  பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது .மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகள்,கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. எனவே கொரோனா காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.  இதற்கு இடையில் தான்  ஐசிசி  கூட்டம் … Read more

பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரியை தாக்கிய கொரோனா!

 கொரோனா பாதிப்பு முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது பல நாடுகளை தாக்கி வருகிற நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில், 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை, பிலிப்பைன்ஸ் நாட்டில் இராணுவ தளபதி, பெலிமோன் சான்டோஸ் ஜூனியர் சந்தித்துள்ளார். இதனையடுத்து, இவர் 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் இவருக்கு தற்போது, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் … Read more

கொரோனா அச்சுறுத்தலால் ஈராக்கில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெற்ற பிரான்ஸ்!

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் நிறைந்துள்ள நிலையில், கொரோனா வைரசால் பிரான்ஸ் நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கொரோனாவால் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கொரோனா வைரசால் பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலகம் முழுவதும் நிலவும் சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு … Read more