சர்வதேசம் உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது..

சர்வதேச அரசியலே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 வருடத்திற்கு ஒரு முறையும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.அதனடிப்படையில்  இன்று அமெரிக்க தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இந்த இரு கட்சிகள் தான் அமெரிக்க அரசியலில் பல வாய்ந்த கட்சிகள் ஏன் அமெரிக்க அரசியல்  தலையெழுத்தையே அடுத்த 4 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் கட்சிகளாகும். நடப்பாண்டு அதிர்பர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் … Read more

டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை – விவாதத்தில் கமலா ஹாரிஸ் பேச்சு

டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் … Read more

டிரம்ப் கூறுவது சரியல்ல – ஜோ பைடன் விமர்சனம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் முக கவசம் அவசியம் இல்லை,  சமூக இடைவெளி அவசியம் இல்லை என கூறுவது சரியல்ல என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது  மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு குணமடைந்தது.இதனால் அதிபர் டிரம்ப் … Read more

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

2017 -ஆம் ஆண்டு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கொலை செய்ய நினைத்தேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாகவே சிரியாவில் அதிபர் ஆசாத்- ஐ.எஸ் பயங்கரவாதிகள் – கிளர்ச்சியாளர்கள்  இடையே மோதல் நடந்துவருகிறது.தற்போது இந்த மோதல்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் ரஷ்யா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது.அதேபோல் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு  ஆதரவு அளித்து வருகிறது. சிரியாவில் பல்வேறு பகுதிகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் … Read more

எனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிக்கின்றனர் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

நானும் ,எனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிக்கின்றோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல்  இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை … Read more

டிரம்ப் ஒருபோதும் அதிபர் பதவியை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை – ஒபாமா

டிரம்ப் ஒருபோதும் அதிபர் பதவியை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை  என்று ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது.ஓன்று ஜனநாயக கட்சி,மற்றொன்று குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், … Read more

அதிபர் டொனால்டு ட்ரம்ப் சகோதரர் காலமானார்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலமானார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்  சகோதரர் ராபர்ட் டிரம்ப் . இவர் ஒரு தொழிலதிபர், இவர் உடல்நிலை குறைவுகாரணமாக  கடந்த மாதம் நியூயார்க்கில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று  இரவு இறந்தார் என்று வெள்ளைமாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டிரம்ப் வயது 71. இவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்தினம் தனது … Read more

இனி எச்1 பி விசா வைத்திருப்பர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைக்கு தடை.. டிராம்ப் அதிரடி.!

அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன்பிறகும்  தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம். இந்த “எச்1 பி” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும்,  சீனர்களும் தான் பெற்று வருகின்றனர். ஆனால், டிரம்ப் பதவி ஏற்றபிறகு அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “எச்1 பி”விசாவில் பல கட்டுப்பாடுகளை விதித்தார். … Read more

டிக்டாக்கிற்கு செப்டம்பர்-15 வரை கெடு விற்றுவிடுங்கள் இல்லையென்றால் : டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா செயலியான டிக்டாக்கிற்கு செப்டம்பர் வரை கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார் . டிக்டாக் செயலிக்கு  இந்த ஆண்டு மோசமான காலமாக அமைந்துள்ளது .இந்தியாவில் டிக்டாக் செயலி உட்பட 59 செயலிகளை  மத்திய அரசு தடைசெய்துள்ளது .இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் கை  தடைசெய்ய டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார் .கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் தடைசெய்யப்படும் என்ற தகவல் வெளியானது,இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம்  டிக்டாக் செயலியை  வாங்கி சமூகவலைதளத்தில் கால்பதிக்க தீவிரம் காட்டிவருகிறது. … Read more

ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் – அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஆதரவு

கொரோனா வைரஸைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆதரித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 46,34,985 பேருக்கு  கொரோனா  பாதிப்பு உறுதியாகியுள்ளது.155,285 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு   இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை இருந்ததால் அமெரிக்காவிற்கு மருந்தை அனுப்பாமல் இருந்தது. இதனால் அதிபர் டிரம்ப் மருந்து அனுப்பினால் பாராட்டு, … Read more